சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சந்தேக மரணம் போலீசார் விசாரணை

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்மமான முறையில் இறந்தவர் குறித்து போலீசார் வழக் குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அரியலுார் மாவட்டம், ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன், 50. இவரது மனைவி கில்டாராணி ஆண்டிமடம் விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். ராயப்பன் நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். இரவு வெகு

ஸ்ரீமுஷ்ணம் : ஸ்ரீமுஷ்ணம் அருகே மர்மமான முறையில் இறந்தவர் குறித்து போலீசார் வழக் குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். அரியலுார் மாவட்டம், ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராயப்பன், 50.

இவரது மனைவி கில்டாராணி ஆண்டிமடம் விளந்தையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். ராயப்பன் நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் ராயப்பனின் மனைவி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர். ராயப்பன் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த அந்தோணியார் புரம் அருட்செல்வம் தானியங்கி கிடங்கு வாசலில் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. கில்டாராணி ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து, ராயப்பன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X