பொது செய்தி

தமிழ்நாடு

9 நாட்களாக மின்வெட்டு; செம்மஞ்சேரி மக்கள் தவிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
செம்மஞ்சேரி : செம்மஞ்சேரியில் உள்ள, ஜெவகர்நகர், எழில்நகர் பகுதிகளில், ஒன்பது நாட்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட மின்தடை முடிவுக்கு வராததால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜெவகர்நகர், எழில்நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒட்டியம்பாக்கம் மேடவாக்கம், காரணை போன்ற பகுதிகளில் உள்ள ஏரி


செம்மஞ்சேரி : செம்மஞ்சேரியில் உள்ள, ஜெவகர்நகர், எழில்நகர் பகுதிகளில், ஒன்பது நாட்களுக்கு முன் அமல்படுத்தப்பட்ட மின்தடை முடிவுக்கு வராததால், அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜெவகர்நகர், எழில்நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

ஒட்டியம்பாக்கம் மேடவாக்கம், காரணை போன்ற பகுதிகளில் உள்ள ஏரி உபரிநீர், செம்மஞ்சேரி வழியாக ஒக்கியம்மடு செல்கிறது.அதே போல், ஓ.எம்.ஆர்., வாணியம்சாவடி பகுதியில் உள்ள நீர்வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு உள்ளதால், நாவலுார், ஏகாத்துார், முட்டுக்காடு ஆகிய ஊராட்சிகளில் வடியும் மழைநீரும், செம்மஞ்சேரி வழியாக, ஒக்கியம்மடு செல்கிறது.இதனால், ஜெவகர்நகர், எழில்நகர் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த பகுதி, இரண்டு மாவட்ட எல்லையை ஒட்டி உள்ளது. தெருக்களில் மழைநீர் வடிய, சென்னை மாநகராட்சி மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் 9ம் தேதி நிறுத்தப்பட்ட மின்சாரம், இதுவரை மீண்டும் வழங்கப்படவில்லை.

இதனால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இது குறித்து, ஜெவகர்நகர், எழில்நகர் மக்கள் கூறியதாவது: மழைநீர் வடிய முறையான நடவடிக்கை எடுக்காததால், ஒன்பது நாட்களாக மின்சாரம் இல்லாமல் தவிக்கிறோம். குழந்தைகள் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. செம்மஞ்சேரியில், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் வசிக்கும் பகுதியில், மழைநீரை வடிய செய்து மின்வினியோகம் வழங்கப்பட்டது. எங்கள் பகுதியை கண்டுகொள்ளவில்லை. இது, அதிகாரிகளின் பாரபட்சத்தை காட்டுகிறது. மீண்டும் மழை பெய்தால், பாதிப்பு அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X