பொது செய்தி

தமிழ்நாடு

ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
தேனி-கார்த்திகை முதல் நாளான நேற்று தேனி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர்.சபரிமலை ஐயப்பன் கோயிலி மண்டல பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலையணிந்து 41 நாட்கள் விரதம் கடைப்பிடித்து இருமுடிகட்டி கோயிலுக்கு செல்வர். நேற்று தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், வீரபாண்டி கண்ணீஸ்வர முடையார் கோயிலில் சிறுவர் முதல்

தேனி-கார்த்திகை முதல் நாளான நேற்று தேனி மாவட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர்.சபரிமலை ஐயப்பன் கோயிலி மண்டல பூஜையில் கலந்து கொள்ள பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலையணிந்து 41 நாட்கள் விரதம் கடைப்பிடித்து இருமுடிகட்டி கோயிலுக்கு செல்வர். நேற்று தேனி பெத்தாட்சி விநாயகர் கோயில், வீரபாண்டி கண்ணீஸ்வர முடையார் கோயிலில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரையிலான பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவங்கினர்.பழனிச்செட்டிபட்டி அன்னதானபிரபு குழு குருசாமி ஐயப்பன் கூறுகையில், ''35வது முறையாக மாலையணிந்துள்ளேன். எனது தலைமையில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் விரதம் இருந்து சபரிமலை செல்வோம். கணபதி அர்ச்சனை, சரணகோஷம் முழுங்க சிவன் அபிேஷகம் செய்து விரதம் துவங்கினோம். கார்த்திகை 3, 5, 7, 11 தேதிகளில் பக்தர்கள் மாலையணிய உள்ளனர். கடந்தஆண்டை விட இம்முறை அதிகளவில் பக்தர்கள் மாலையணிவார்கள்'' என்றனர். சுருளியாற்றில் ஐயப்ப பக்தர்கள் குளித்து குருசாமிகளிடம் துளசிமாலையணிந்து கொண்டனர். சுருளிவேலப்பர் சுப்ர மணிய ஐயப்பா சேவா சங்கத்தினருக்கு குருசாமி நாராயணன் மாலையணிவித்தார். ஐயப்பன்கோயிலிலும் சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. உத்தமபாளையம் ஞானம்மன்கோயில், சின்னமனுார் சிவகாமியம்மன்கோயில் படித்துரைகளிலும் நீராடி மாலையணிந்தனர். சின்னமனுார் ஐயப்பன் கோயிலில் நகர் பா.ஜ., தலைவர் லோகேந்திரராசன் பக்தர்களுக்கு மாலையணிவித்தார்.பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, தேவாரம் பகுதிகளில் பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X