தமிழ்நாடு

சித்தேரியில் மீண்டும் கழிவு நீர் கலப்பு; சமூக ஆர்வலர்கள், நலச்சங்கத்தினர் கொதிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
புழுதிவாக்கம் சித்தேரியில், பல்வேறு வழிகளில் கழிவு நீர் கலந்து வருவதால் சமூக ஆர்வலர்கள், நலச்சங்கத்தினர் கொதிப்படைந்துள்ளனர்.பெருங்குடி மாநகராட்சி மண்டலம், 169வது வார்டில் அமைந்துள்ளது புழுதிவாக்கம் சித்தேரி. ஆக்கிரமிப்பு போக தற்போது, 27 ஏக்கர் பரப்பளவுடன் காணப்படுகிறது.துர்நாற்றம்பரங்கிமலை ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்தபோது, பல ஆண்டுகளாக ஏரி பராமரிக்கப்படாமல்
 சித்தேரியில் மீண்டும் கழிவு நீர் கலப்பு;   சமூக ஆர்வலர்கள், நலச்சங்கத்தினர் கொதிப்பு



புழுதிவாக்கம் சித்தேரியில், பல்வேறு வழிகளில் கழிவு நீர் கலந்து வருவதால் சமூக ஆர்வலர்கள், நலச்சங்கத்தினர் கொதிப்படைந்துள்ளனர்.பெருங்குடி மாநகராட்சி மண்டலம், 169வது வார்டில் அமைந்துள்ளது புழுதிவாக்கம் சித்தேரி. ஆக்கிரமிப்பு போக தற்போது, 27 ஏக்கர் பரப்பளவுடன் காணப்படுகிறது.துர்நாற்றம்பரங்கிமலை ஒன்றிய கட்டுப்பாட்டில் இருந்தபோது,

பல ஆண்டுகளாக ஏரி பராமரிக்கப்படாமல் இருந்தது. ஏரியின் ஒரு பக்கக் கரை உடைத்து சிலர் ஆக்கிரமித்தனர்.அப்பகுதியில் பாதாள சாக்கடை இணைப்பு இல்லாததால், பாலையா கார்டன் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் வாயிலாகவும், கரை பகுதியில் உள்ளவர்கள், குழாய் வாயிலாகவும் கழிவு நீர் விட்டு வந்தனர்.பலர் 'செப்டிக் டேங்க்' கழிவுகளையும் குழாய் வாயிலாக மழை நீர் வடிகாலில் விட்டு வந்தனர். கரையோர வீடுகளின் குப்பையும் ஏரியில் கொட்டப்பட்டு வந்தன. இதனால், புழுதிவாக்கம் ஏரி மாசடைந்து, துர்நாற்றம் வீசியது.

இது குறித்து, நம் நாளிதழ் தொடர் செய்திகளை வெளியிட்டு வந்தது. இதன் எதிரொலி நடவடிக்கையாக, மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்த புழுதிவாக்கம் சித்தேரிக்கு விமோசனம் பிறந்தது.ஏரியில் இருந்த குப்பை அகற்றப்பட்டு, கழிவு நீர் குழாய்கள் அகற்றப்பட்டன. மழை நீர் வடிகால் வழியாக கழிவு நீர் கலப்பதும் தடுத்து Lநிறுத்தப்பட்டது.சித்தேரியை சீரமைக்க, 2.44 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதில், நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றது.

இந்நிலையில், மழை நீர் வெளியேற்றுவது போல, மீண்டும் மழை நீர் வடிகால் வழியாக ஏரியில் கழிவு நீர் விடப்படுகிறது.அதேபோல, பாதாள சாக்கடையில் சேகரமாகியுள்ள கழிவு நீர் கலந்த மழை நீர், வடிகால் வாயிலாக ஏரியில் விடப்படுகிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள், நலச்சங்கத்தினர் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நடவடிக்கைநலச்சங்கத்தினர் கூறியதாவது:பல கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு வரும் ஏரியில், ஆறாக பாயும் கழிவு நீரை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.வீடுகளில் இருந்து மழை நீர் வடிகாலுக்கு கொடுக்கப்பட்டுள்ள கழிவு நீர் இணைப்பு குழாய்களை கண்டறிந்து அகற்ற வேண்டும்.

ஏரிக்குள் கழிவு நீர் அறவே கலக்காத வகையில், சென்னை மாநகராட்சியும், குடிநீர் வாரியமும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு நலச்சங்கத்தினர் கூறினர்.

- நமது நிருபர்- -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X