சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழி விடுவதில் தகராறு 2 கோஷ்டியிடம் விசாரணை

Added : நவ 18, 2021
Share
Advertisement
பம்மல் : அனகாபுத்துாரில், இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரையும் கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அனகாபுத்துார் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 28. நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பொழிச்சலுார், ஞானமணி நகரில், நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, பொழிச்சலுாரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர், அவ்வழியாக

பம்மல் : அனகாபுத்துாரில், இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதில் ஏற்பட்ட தகராறில், இரு தரப்பினரையும் கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

அனகாபுத்துார் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 28. நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து பொழிச்சலுார், ஞானமணி நகரில், நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, பொழிச்சலுாரைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றார்.அப்போது, வாகனத்திற்கு வழிவிடவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தகராறில், பிரசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து, பன்னீர்செல்வத்தை தாக்கினர். ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், தன்னுடைய நண்பர்களை அழைத்து வந்து, பிரசாந்தை, புல் வெட்டும் கத்தியால் தலையில் வெட்டினார்.காயமடைந்த பிரசாந்த், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இது தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, பிரசாந்த் மற்றும் பன்னீர்செல்வம் ஆகிய இரு தரப்பினரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X