முல்லைப்பெரியாற்றில் குளிக்க தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முல்லைப்பெரியாற்றில் குளிக்க தடை

Added : நவ 18, 2021
Share
கூடலுார்--கனமழையால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் லோயர்கேம்பில் துவங்கி கூடலூர், கம்பம், உத்தமபாளையம் சின்னமனூர் வழியாக முல்லைப் பெரியாற்றில் ஓடி வைகை அணையை அடையும்.தற்போது கூடலூர், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில்

கூடலுார்--கனமழையால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்தால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 2300 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நீர் லோயர்கேம்பில் துவங்கி கூடலூர், கம்பம், உத்தமபாளையம் சின்னமனூர் வழியாக முல்லைப் பெரியாற்றில் ஓடி வைகை அணையை அடையும்.தற்போது கூடலூர், கம்பம், உத்தமபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.அதனால் ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என கூடலூர் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். மேலும் சபரிமலை சீசன் துவங்கியுள்ளதால் பக்தர்கள் மழை முடியும் வரை ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X