சோதனை மேல் சோதனை வேளச்சேரி மக்கள் பரிதவிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
வேளச்சேரி : சதுப்பு நிலம் வழியாக பெருங்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செல்லும் கழிவு நீர் குழாய் உடைப்பால், ஏற்கனவே மழையால் தத்தளிக்கும் வேளச்சேரி மக்களுக்கு, கூடுதல் சோதனை ஏற்பட்டு உள்ளது.ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை பகுதியில் வடியும் கழிவு நீர், அந்தந்த கழிவு நீர் வெளியேற்று நிலையத்தில்
 சோதனை மேல் சோதனை வேளச்சேரி மக்கள் பரிதவிப்பு

வேளச்சேரி : சதுப்பு நிலம் வழியாக பெருங்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் செல்லும் கழிவு நீர் குழாய் உடைப்பால், ஏற்கனவே மழையால் தத்தளிக்கும் வேளச்சேரி மக்களுக்கு, கூடுதல் சோதனை ஏற்பட்டு உள்ளது.

ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார், பழவந்தாங்கல், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை பகுதியில் வடியும் கழிவு நீர், அந்தந்த கழிவு நீர் வெளியேற்று நிலையத்தில் சேர்கின்றன.அங்கிருந்து, பெரிய குழாய் வழியாக, பெருங்குடி கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய், வேளச்சேரி ரயில் நிலையத்தை ஒட்டிய, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் பதிக்கப்பட்டு உள்ளது.வேளச்சேரி டான்சி நகர், அன்னை இந்திரா நகர் மற்றும் தரமணி பெரியார் நகர் சுற்றுவட்டாரத்தில் வடியும் மழை நீர், வேளச்சேரி ரயில் நிலையத்தை ஒட்டி உள்ள ஆறு கல்வெட்டு நீர்வழித்தடம் வழியாக சதுப்பு நிலம் செல்கிறது.

இந்த தண்ணீர் செல்லும் வழித்தடத்தின் குறுக்கே பதியப்பட்ட கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், மூன்று நாட்களாக கழிவு நீர் சதுப்பு நிலத்தில் வடிகிறது.கழிவு நீர் குழாயை சுற்றி சூழ்ந்து நிற்பதால், ஆறு கல்வெட்டு நீர்வழித்தடத்தில் தண்ணீர் செல்வது தடைப்பட்டுள்ளது. சில நீரோட்ட பாதை வழியாக, கழிவு நீர் வேளச்சேரி பகுதிக்கும் செல்கிறது.மூன்று நாட்களாக, சதுப்பு நிலத்தில் கழிவு நீர் சேர்வதால், ஏற்கனவே இயற்கை தன்மையை இழந்த சதுப்பு நிலம் மேலும் மோசம்அடைகிறது.இது குறித்து, அன்னை இந்திரா நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் குமாரராஜா கூறியதாவது:

ஏற்கனவே, மழையால் தத்தளிக்கும் வேளச்சேரி மக்களுக்கு, கூடுதல் பிரச்னையாக கழிவு நீர் உள்ளது. இங்குள்ள, கழிவு நீர் வெளியேற்று நிலையங்களும் முறையாக செயல்படவில்லை. இதில், ஆலந்துார் மண்டலத்தில் இருந்து வரும் கழிவு நீரை, முறையாக சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லாததால், அதிக பாதிப்புக்கு உள்ளாகிறோம். எங்களுக்கு, மழைக்காலங்களில் சோதனை மேல் சோதனையாக உள்ளது. கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண, வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X