பொது செய்தி

தமிழ்நாடு

சுவர் விழுந்து இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
நெய்வேலி : நெய்வேலி அருகே சுவர் விழுந்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரண உதவித் தொகையை அமைச்சர் கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினர்.நெய்வேலி அடுத்த வடக்குமேலுார் கிராமத்கை சேர்ந்த சந்தோஷ்குமார்.47, கடந்த 13ம் தேதி கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து இறந்தார். அவரது குடும்பத்திற்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தனது சொந்த நிதி ரூ. 25 ஆயிரம் வழங்கி, ஆறுதல்
 சுவர் விழுந்து இறந்தவரின்  குடும்பத்திற்கு நிவாரணம்

நெய்வேலி : நெய்வேலி அருகே சுவர் விழுந்து இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரண உதவித் தொகையை அமைச்சர் கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., வழங்கினர்.

நெய்வேலி அடுத்த வடக்குமேலுார் கிராமத்கை சேர்ந்த சந்தோஷ்குமார்.47, கடந்த 13ம் தேதி கனமழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து இறந்தார். அவரது குடும்பத்திற்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தனது சொந்த நிதி ரூ. 25 ஆயிரம் வழங்கி, ஆறுதல் கூறினார்.தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், அமைச்சர் கணேசன், சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., ஆகியோர் தமிழக அரசின் சார்பில், வடக்கு மேலுார் கிராமத்திற்கு சென்று இறந்த சந்தோஷ்குமாரின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் உதவித் தொகை வழங்கினர்.குறிஞ்சிப்பாடி தாசில்தார் சையது அபுதாக்கீர், வருவாய் ஆய்வாளர் தேவராஜ், வி.ஏ.ஓ., ராமலிங்கம், வடக்குமேலுார் ஊராட்சி தலைவர் ராமமூர்த்தி, ஊராட்சி செயலாளர் ஏழுமலை, குறிஞ்சிப்பாடி ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், தொ.மு.ச., அலுவலக செயலாளர் ஜெரால்டு, இளைஞரணி ராஜேஷ் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X