பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை காவல் துறைக்கு 'ட்ரோன்' வாங்க நிதி ஒதுக்கீடு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை பெருநகர காவல் துறைக்கு, 'ட்ரோன்' காவல் அலகு ஏற்படுத்த 3.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் துறைக்கு 3.60 கோடி ரூபாய் செலவில், 'ட்ரோன்' காவல் அலகு ஏற்படுத்தப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில், போலீஸ் மானிய கோரிக்கையின்போது அறிவித்தார்.இதனால், கூட்டமான இடங்களையும், நீண்ட துார சாலைகளையும் கண்காணிக்க முடியும்.அதன்படி, 2.50

சென்னை : சென்னை பெருநகர காவல் துறைக்கு, 'ட்ரோன்' காவல் அலகு ஏற்படுத்த 3.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை பெருநகர காவல் துறைக்கு 3.60 கோடி ரூபாய் செலவில், 'ட்ரோன்' காவல் அலகு ஏற்படுத்தப்படும் என, முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில், போலீஸ் மானிய கோரிக்கையின்போது அறிவித்தார்.

இதனால், கூட்டமான இடங்களையும், நீண்ட துார சாலைகளையும் கண்காணிக்க முடியும்.அதன்படி, 2.50 கிலோ எடை கொண்ட, தொடர்ச்சியாக 2 கி.மீ., தொலைவுக்குள், 30 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் ஆறு; 5 கிலோ எடை கொண்ட, தொடர்ச்சியாக, 30 கி.மீ., தொலைவுக்குள், 100 நிமிடங்கள் பறக்கும் திறன் கொண்ட ட்ரோன்கள் இரண்டு.மேலும், 12 கிலோ எடை கொண்ட, 1 கிலோ மீட்டர் தொலைவுக்குள், 15 நிமிடங்கள் தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்ட ட்ரோன் ஒன்று என, மொத்தம் ஒன்பது ட்ரோன்கள் வாங்க, சென்னை போலீஸ் கமிஷனர், அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.

அதை பரிசீலனை செய்த அரசு, ஒன்பது ட்ரோன்கள் வாங்க, மூன்று கோடி ரூபாய்; ட்ரோன்களை இயக்குவதற்கு தேவையான கட்டுப்பாட்டு அறை மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த, 60 லட்சம் ரூபாய் என, மொத்தம், 3.60 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. உள்துறை செயலர் பிரபாகர் அரசாணையை வெளியிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X