பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தலுக்கு 5,794 ஓட்டுச்சாவடிகள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை : சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு, 5,794 ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு வெளியிட்பட்டு உள்ளன.இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:மாநில தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, கடந்த 6ம் தேதி

சென்னை : சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு, 5,794 ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டு வெளியிட்பட்டு உள்ளன.இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பு:மாநில தேர்தல் கமிஷனின் உத்தரவுப்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 200 வார்டுகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு, வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் மாவட்ட தேர்தல் அலுவலர் ககன்தீப் சிங் பேடி, கடந்த 6ம் தேதி வெளியிட்டார்.

வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல், மாநகராட்சி தலைமை அலுவலகம், 15 மண்டல அலுவலகங்கள் மற்றும் 200 வார்டு அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.இதைத்தொடர்ந்து, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு கூட்டம் 15ம் தேதி நடந்தது.வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல் குறித்து ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் கருத்துகள் இருப்பின், 16ம் தேதிக்குள் தெரிவிக்க கேட்டு கொள்ளப்பட்டது.

அவ்வாறு பெறப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் கருத்துக்களின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதன்படி, ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்காக, தலா, 255 ஓட்டுச்சாவடிகள் மற்றும் அனைத்து வாக்காளர்களுக்கு என, மொத்தம் 5,794 ஓட்டுச்சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X