பொது செய்தி

தமிழ்நாடு

ரசிக்கலாம்... தரிசிக்கலாம்...! 'இறை இடம் இவர்' ஓவிய கண்காட்சி துவக்கம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை : ''அனைத்து கடவுளையும் ஓரிடத்தில் காணக்கூடிய வாய்ப்பு நமது பாக்கியம். அந்த வாய்ப்பு இன்று இறை இடம் இவர் ஓவிய கண்காட்சி துவக்க விழாவில், நமக்கு கிடைத்துள்ளது,'' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதாசேஷயன் கூறினார்.சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை, புறவழிச்சாலையில் உள்ள 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ்
 ரசிக்கலாம்... தரிசிக்கலாம்...!   'இறை இடம் இவர்' ஓவிய கண்காட்சி துவக்கம்


சென்னை : ''அனைத்து கடவுளையும் ஓரிடத்தில் காணக்கூடிய வாய்ப்பு நமது பாக்கியம். அந்த வாய்ப்பு இன்று இறை இடம் இவர் ஓவிய கண்காட்சி துவக்க விழாவில், நமக்கு கிடைத்துள்ளது,'' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதாசேஷயன் கூறினார்.

சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை, புறவழிச்சாலையில் உள்ள 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' மற்றும் 'தினமலர்' நாளிதழ் சார்பில், இறைநெறி ஓவியர் ஆ.மணிவேலுவின் 'இறை இடம் இவர்' என்ற, ஆன்மிக ஓவிய கண்காட்சி நேற்று துவங்கியது.கோவில்கள்ஓவியர் மணிவேலு, உ.பி., மாநிலம், வாரணாசி முதல் கன்னியாகுமரி வரை உள்ள பழமையான கோவில்கள் மற்றும் அவற்றின் கருவறையில், பல்வேறு அலங்காரங்களுடன் இருக்கும் வழிபாட்டு சிற்பங்களை ஓவியங்களாக வரைந்துள்ளார்.

அவரது, 52 ஓவியங்கள் இடம் பெற்ற இந்த கண்காட்சியை, சிறப்பு விருந்தினர் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதாசேஷயன், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.அவருடன் மத்திய கலாசார துறையின் லலித் கலா அகடாமி மண்டல செயலர் சோவன்குமார், டாட் ஸ்கூல் ஆப் டிசைன் நிறுவனர் ஏ.ஆர்.ஆர்., ராமநாதன், அகாடமி ஒருங்கிணைப்பாளர் எலிசபெத் ஜோசப், ஓவியர் மணிவேலுவின் மகன் ஆறுமுகம் ஆகியோர் இருந்தனர்.

துணைவேந்தர் சுதாசேஷயன் பேசியதாவது:நாம் தினமும் கோவிலுக்கு சென்றாலும், ஒவ்வொரு கடவுளையும், ஒவ்வொரு கோவிலில் தான் காண்கிறோம். ஆனால், இங்கு அனைத்து கடவுளையும், ஓரிடத்தில் காணக்கூடிய அற்புதமான வாய்ப்பு கிடைத்தது. இது நமக்கு கிடைத்த பாக்கியம். இந்த ஓவியங்கள், உற்சாகத்தையும், ஆச்சரியத்தையும் அளிக்கின்றன. அந்த வகையில், சிறந்த ஓவியங்களை நமக்கு அளித்த ஓவியர் மணிவேலுவுக்கு நன்றி.அடுத்து, இந்த கண்காட்சி அமைந்துள்ள இந்த இடத்தின் பெயர், 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' எனப்படுகிறது. இந்த பெயரும் அற்புதமானது தான். உலகின் செயல்திறன் அனைத்துமே, ஒரு மையப்புள்ளியில் தான் ஆரம்பிக்கிறது. ஓவியமும், புள்ளியில் தான் ஆரம்பிக்கப்படுகிறது. நான் படித்த உடற்கூறியல் மருத்துவ துறையும், ஓவியமும் ஒன்று தான். இரண்டுமே இயக்க பரிமாணங்களின் அடிப்படையில் உருவாகின்றன.இவ்வாறு, அவர் பேசினார்.அகடாமி மண்டல செயலர் சோவன்குமார் பேசியதாவது:ஓவியர் மணிவேலுவின் ஆன்மிக ஓவியங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. அவற்றை உருவாக்கிய, அவரது திறன் போற்றுதலுக்குரியது. இந்த ஓவியங்கள் குறித்து துணைவேந்தர் சுதாசேஷயன், எனக்கு விளக்கியதும் மகிழ்ச்சிக்குரியதாகும். இதே போன்று, எனது ஓவியங்கள் கொண்ட கண்காட்சியையும் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது. ஓவியம் குறித்து மாணவர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன.அதற்கான வாய்ப்பை 'டாட் ஸ்கூல் ஆப் டிசைன்' போன்ற கல்வி மையங்கள் அளிக்கின்றன.

மற்றொரு நாள், இங்கு வந்து, மாணவர்களின் அனுபவத்தையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.சாமி படங்கள்கண்காட்சியில் புகழ் பெற்ற, சோட்டானிக்கரை பகவதி அம்மன், சங்கரன் கோவில் கோமதி அம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவில், திருக்குறுங்குடி அழகிய நம்பி, உப்பிலியப்பன் வெங்கடாஜலபதி உள்ளிட்ட சாமி மற்றும் கோவில்களின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.சிறப்பு விருந்தினர்களுக்கு, சாமி படங்கள் நினைவுப்பரிசாக அளிக்கப்பட்டன. விழாவில் பங்கேற்றவர்களுக்கு ஓவிய கண்காட்சியில் இடம் பெற்ற சாமி படங்களின் தொகுப்பு, கைப்பிரதியாக வழங்கப்பட்டது. கண்காட்சி, அடுத்த மாதம் 14ம் தேதி வரை தினமும் காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X