சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு; அதிகாரிகள் விசாரணை

Added : நவ 18, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பு தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்துறையினர் விசாரணை நடத்தினர்.விருத்தாசலம் அடுத்த பரவளூர் ஊராட்சி களரங்குப்பம், எருக்கன்குப்பம், அண்ணாநகர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்களுக்கு மணிமுக்தாற்றங்கரையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார்.

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பு தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய்துறையினர் விசாரணை நடத்தினர்.

விருத்தாசலம் அடுத்த பரவளூர் ஊராட்சி களரங்குப்பம், எருக்கன்குப்பம், அண்ணாநகர் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இக்கிராம மக்களுக்கு மணிமுக்தாற்றங்கரையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இதனால் இறந்தவர் சடலங்களை அடக்கம் செய்ய முடியாமல் கிராம மக்கள் அவதியடைந்தனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர் பூமாலை, மற்றும் பொதுமக்கள் விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் கமலஹாசன், வி.ஏ.ஓ., மாயக்கண்ணன் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இடத்தை முழுமையாக அளவீடு செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X