மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்

Added : நவ 18, 2021
Share
புதுச்சேரி : 'தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு புதுச்சேரி மற்றும் தமிழக முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தேசிய மீனவர் பேரவை தலைவரான, முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ கூறினார்.அவர் நிருபர்களிடம் கூறியதாவது:எல்லைதாண்டி மீன் பிடித்ததாக, நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 23

புதுச்சேரி : 'தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது குறித்து இருநாட்டு மீனவ பிரதிநிதிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு புதுச்சேரி மற்றும் தமிழக முதல்வர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தேசிய மீனவர் பேரவை தலைவரான, முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ கூறினார்.

அவர் நிருபர்களிடம் கூறியதாவது:எல்லைதாண்டி மீன் பிடித்ததாக, நாகை அக்கரைப்பேட்டை மீனவர்கள் 23 பேரை, கடந்த அக்.,13ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து,2 படகுகளை பறிமுதல் செய்தனர்.கடந்த வாரம் புதுச்சேரிக்கு வந்தஇலங்கை மாகாண முன்னாள் முதல்வர் செந்தில் தொண்டமான், அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோரை சந்தித்து, சிறையில் உள்ள நாகை மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது0 பின்னர்,கோர்ட் நடவடிக்கை மூலம் மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.படகுகளை விடுவிக்க இலங்கை தலைவர்கள் உதவிடவேண்டும்.இது குறித்து தமிழக, புதுச்சேரி முதல்வர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னையை சுமூகமாக முடிக்க இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X