பொது செய்தி

தமிழ்நாடு

ஆதிபுரீஸ்வரர் தைலாபிஷேகத்திற்கு ஏற்பாடு

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை : திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ பெருமாள் கோவிலில், இன்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள், ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறந்து புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், மகா அபிஷேகம் நடக்கிறது.இரவு தியாகராஜசுவாமி உள்புறப்பாடு உற்சவமும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, நாளை முதல் இரண்டு நாட்கள் கவசம் இன்றி மூலவரை தரிசனம் செய்ய இயலும்.ஆண்டிற்கு ஒருமுறை, மூன்று நாட்கள்

சென்னை : திருவொற்றியூர் வடிவுடையம்மன் உடனுறை தியாகராஜ பெருமாள் கோவிலில், இன்று மாலை 6:00 மணி முதல் 7:00 மணிக்குள், ஆதிபுரீஸ்வரருக்கு கவசம் திறந்து புனுகு சாம்பிராணி தைலாபிஷேகம், மகா அபிஷேகம் நடக்கிறது.

இரவு தியாகராஜசுவாமி உள்புறப்பாடு உற்சவமும் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, நாளை முதல் இரண்டு நாட்கள் கவசம் இன்றி மூலவரை தரிசனம் செய்ய இயலும்.ஆண்டிற்கு ஒருமுறை, மூன்று நாட்கள் மட்டும் கவசமின்றி சுவாமியை தரிசிக்கலாம்.இந்நிகழ்வில், பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், மூன்று வகையான வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன.பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த, பூந்தோட்ட தெருவில் உள்ள அரசு கல்லுாரி வளாகத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.ஆதிபுரீஸ்வரரின் தைலாபிஷேகத்திற்கு தேவையான சாம்பிராணி தைலம் கோவில் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள், விரைவு தரிசனம் செய்வதற்கு, www.hrce.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்துக் கொள்ளலாம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X