பொது செய்தி

இந்தியா

வீடற்றவர்களுக்கு மனைப்பட்டா அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மனு

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் வீடற்றவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.உப்பளம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார். பல இடங்களில், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி நேற்று நில அளவைத் துறை
 வீடற்றவர்களுக்கு மனைப்பட்டா அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மனு

புதுச்சேரி : உப்பளம் தொகுதியில் வீடற்றவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.உப்பளம் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

பல இடங்களில், இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி நேற்று நில அளவைத் துறை இயக்குநர் ரமேஷை சந்தித்து மனு அளித்தார். அப்போது, ராசு உடையார் தோட்டம் அருகில் உள்ள கீழ் தோப்பில் வசிக்கும் 20 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா அளிக்குமாறு முதல்வரிடம் கோரிக்கை விடுத்தேன். அதனையேற்று லாம்பர்ட் சரவணன் நகரில் 20 குடும்பங்களுக்கு இலவச மனைப்பட்டா ஆணை அளிக்கப்பட்டது.

அவர்கள் அங்கு குடியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிரான்சுவா தோப்பு, ஆட்டுப்பட்டி, கனிபாய் தோட்டம், பெரிய பாளையத்தம்மன் கோவில் நிலம் அருகில் உள்ள அறப்பணி அவை தோட்டம் பகுதி மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.மனுவை பெற்றுக் கொண்ட இயக்குநர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.அப்போது, தி.மு.க., தொகுதி அவைத் தலைவர் ரவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X