பொது செய்தி

தமிழ்நாடு

புதிய மாற்றத்தால் நடவு, களையெடுப்பு தண்ணீர் செலவு குறைவு

Added : நவ 18, 2021
Share
Advertisement
மதுரை -வாடிப்பட்டி வட்டாரத்தில் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைந்து 100 ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை ஒரே இடத்தில் உற்பத்தி செய்வதன் மூலம் உற்பத்தி செலவை குறைத்துள்ளனர்.விதைப்புக்கு தேவையான விதை, உயிர் உரம், நுண்ணுாட்ட உரங்களை வாடிப்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் கூட்டாக இணைந்து பெற்று பயனடைகின்றனர். நீரேத்தான், மேட்டு நீரேத்தான் பகுதி

மதுரை -வாடிப்பட்டி வட்டாரத்தில் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைந்து 100 ஏக்கருக்கு தேவையான நாற்றுகளை ஒரே இடத்தில் உற்பத்தி செய்வதன் மூலம் உற்பத்தி செலவை குறைத்துள்ளனர்.விதைப்புக்கு தேவையான விதை, உயிர் உரம், நுண்ணுாட்ட உரங்களை வாடிப்பட்டி வேளாண்மை விரிவாக்க மையத்தில் கூட்டாக இணைந்து பெற்று பயனடைகின்றனர். நீரேத்தான், மேட்டு நீரேத்தான் பகுதி விவசாயிகள் நெற்பயிரில் திருந்திய நெல் சாகுபடி முறையில் நடவு செய்வதற்காக பாய் நாற்றாங்கால் அமைத்துள்ளனர் என வாடிப்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் வாசுகி தெரிவித்துள்ளார்.இம்முறை குறித்து நீரேத்தான் உழவர் உற்பத்தியாளர் குழுத் தலைவர் ஜெயத்ரட்சகன் கூறியதாவது: 5 உழவர் குழுவில் உள்ள 100 விவசாயிகள் இணைந்து உழவர் உற்பத்தியாளர் குழுவை அமைத்துள்ளோம். விவசாயிகளின் அடிப்படை பிரச்னையே நாற்றுநடவும் ஆள் பற்றாக்குறையும் தான். எங்கள் குழுவில் உள்ள ஒரு விவசாயியின் வயலில் 30 விவசாயிகளின் 100 ஏக்கருக்கு தேவையான விதைகளை துாவி நாற்று உற்பத்தி செய்கிறோம்.நாற்று உற்பத்திக்கு திருச்சி 1 ரக நெல் விதைகளை நடவு செய்துள்ளோம். இது சன்ன, மோட்டா ரகத்துக்கு இடையில் இருப்பதால் நெல் கொள்முதல் மையத்தில் விலை போகும். தனித்தனியாக நடவு செய்தால் தண்ணீர் செலவு, ஆட்கள் செலவு அதிகமாகும். இங்கு மொத்த செலவை பகிர்ந்து கொள்கிறோம். கூட்டு பண்ணைய திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பிலான இரண்டு நெல் நடவு இயந்திரங்கள் மானியமாக வழங்கப்பட்டது.அதை கொண்டு ஒரு நாளைக்கு 12 ஏக்கர் வயலில் 14 - 20 வயதுடைய நாற்றுகளை எளிதாக நடவு செய்யலாம். கையால் நடுவதை விட இயந்திரம் மிக நேர்த்தியாக நடுவதால் சேதாரமில்லை. தண்ணீர் அதிகம் கட்ட வேண்டியதில்லை. நட்ட 3ம் நாளிலேயே களைக்கொல்லி பயன்படுத்துவதால் களை எடுப்பு செலவும் குறைகிறது. சீரான இடைவெளியில் பயிர்கள் வளர்வதால் பூச்சிதாக்குதலும் குறைகிறது. விவசாயிகள் ஒன்று சேர்ந்தால் விளைச்சலும் விலையும் லாபகரமாக இருக்கும் என்பதை அனுபவத்தில் புரிந்து கொண்டோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X