போலீஸ் செய்தி..

Added : நவ 18, 2021
Share
Advertisement
705 மாணவர்கள் மீது வழக்குமதுரை: ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தை சில கல்லுாரி மாணவர்கள் இரு நாட்களாக முற்றுகையிட்டனர். ஊரடங்கு தடையை மீறி ஊர்வலம் வந்ததாக தல்லாகுளம், ஜெய்ஹிந்த்புரம், திருப்பரங்குன்றம் ஸ்டேஷன்களில் மொத்தம் 705 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்றும் முற்றுகையிட திட்டமிட்ட மாணவர்களை கல்லுாரி வாசலிலேயே

705 மாணவர்கள் மீது வழக்குமதுரை: ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்தக்கோரி மதுரை கலெக்டர் அலுவலகத்தை சில கல்லுாரி மாணவர்கள் இரு நாட்களாக முற்றுகையிட்டனர். ஊரடங்கு தடையை மீறி ஊர்வலம் வந்ததாக தல்லாகுளம், ஜெய்ஹிந்த்புரம், திருப்பரங்குன்றம் ஸ்டேஷன்களில் மொத்தம் 705 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்றும் முற்றுகையிட திட்டமிட்ட மாணவர்களை கல்லுாரி வாசலிலேயே எச்சரித்து அனுப்பினர்.சர்ச்சில் விழுந்து பலிமதுரை: கரிமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளது. இங்கு நேற்று மாலை 15 அடி உயரத்தில் ஏறி அழகரடி எலக்ட்ரீசியன் பாலகங்காதரதிலகர் 59, மின்விளக்கு மாட்டியபோது தவறி விழுந்து தலையில் அடிபட்டு இறந்தார்.மரம் விழுந்து இளைஞர் பலிமதுரை: வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜீத் 25. தீர்த்தங்கரை பகுதியில் மரம் ஒன்றை சக தொழிலாளர்களுடன் சேர்ந்து வெட்டினார். நேற்று மாலை கயிறு கட்டி இழுத்ததில் மரம் விழுந்தது. அதில் சிக்கி அஜீத் இறந்தார்.கிணற்றில் விழுந்தஇருவர் பலிஉத்தப்பநாயக்கனுார்: சின்னபாலார்பட்டி கருப்பத்தேவர் 75. அவரது தோட்டத்து கிணற்றைச் சுற்றி வளர்ந்துஇருந்த செடிகளை அகற்றும் பணியின்போது கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார்.உசிலம்பட்டி: விளாம்பட்டி ஜெயப்பிரகாசம் தோட்டத்தில் 80 அடி ஆழமான கிணற்றுக்குள் கோழி தவறி விழுந்தது. இதனை மீட்க கவுண்டன்பட்டி ஜெயம் 45, கிணற்றுக்குள் இறங்கியபோது தவறி விழுந்து இறந்தார்.மின்னல் தாக்கிபுதுமாப்பிள்ளை பலி திருமங்கலம்: எலியார்பத்தி பாலு 31. பரம்புப்பட்டி நந்தினியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு அவ்வூரில் வசித்து வந்தார். மாற்றுதிறனாளியான இவர் நேற்று மதியம் ஆடு, மாடு மேயக்க சென்ற போது மின்னல் தாக்கி இறந்தார். ஒரு மாடும் பலியானது.நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு 6 பேர் மீது வழக்குமதுரை: சிந்தாமணி ரோடு ராஜம்மான் நகர் மாரிசெல்வம் 33. பா.ம.க., மாநில இளைஞரணி துணைத்தலைவர். நேற்றுமுன்தினம் இவரது வீட்டில் இரு நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக அழகேசன், வழக்கறிஞர் மணிகண்டன் உட்பட 6 பேர் மீது கீரைத்துரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.உண்டியல் திருடிய 2 பேர் கைதுதிருமங்கலம்: டி.புதுப்பட்டி வெங்கடாசலபதி கோயிலில்கடந்த மாதம் உண்டியல் திருடுபோனது. திருமங்கலம் தாலுகா போலீசார் சோளங்குருணி பாலமுருகன், காரியாபட்டி முனியசாமியை கைது செய்து அரை பவுன் நகை, ரூ. 20 ஆயிரத்தை மீட்டனர். மேலும் அச்சம்பட்டி ஆட்டுப்பண்ணையில் 150 எல்.இ.டி., விளக்குகளை திருடியது உட்பட 9 வழக்குகள் இவர்கள் மீது உள்ளன. கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி., பாஸ்கரன் பாராட்டினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X