குடியிருப்புகளில் வடியாத வெள்ளம்; பூந்தமல்லியில் மக்கள் தவிப்பு

Added : நவ 18, 2021
Advertisement
பூந்தமல்லி : கனமழை நின்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், பூந்தமல்லியில், குடியிருப்புகளில் தேங்கிய வெள்ளம் இன்னமும் வடியாததால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். வடகிழக்கு பருவமழையால், கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.மழை நின்று ஒரு


பூந்தமல்லி : கனமழை நின்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், பூந்தமல்லியில், குடியிருப்புகளில் தேங்கிய வெள்ளம் இன்னமும் வடியாததால், அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர்.

வடகிழக்கு பருவமழையால், கடந்த வாரம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி, வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.மழை நின்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட, எல்.கே.பி., மற்றும் தனலட்சுமி நகர் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீர், இன்னமும் வடிந்தபாடில்லை. இதனால், அங்கு வசிப்போர், கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

நகராட்சி நிர்வாகம், போதிய நடவடிக்கைகளை எடுக்காததே, மக்கள் பாதிப்புக்கு காரணம் என, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:குடியிருப்புகளை சுற்றியும், வீடுகளுக்குள்ளேயும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கழிவு நீர் கலந்துள்ளதால், அதிலேயே நடக்க வேண்டியுள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. கொசுத் தொல்லையும், பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது;

துர்நாற்றம் வீசுகிறது. பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள், மோட்டார் வைத்து, ஒரு நாள் மட்டும் தண்ணீரை அகற்றினர். அடுத்த நாள், மோட்டார் பழுதானதால், மழைநீரை அகற்றும் பணி கைவிடப்பட்டது.தற்போது, மீண்டும் மழை துவங்கியுள்ளதால், இங்கு வசிக்கும் மக்கள் மேலும் பாதிப்பை சந்திக்க நேரிடும். எனவே, அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X