பொது செய்தி

தமிழ்நாடு

நெடுஞ்சாலை சீரமைப்பு பணி தீவிரம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
கன மழை காரணமாக, பல நாட்கள் தேங்கிய மழை நீரால், நெடுஞ்சாலைகளின் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியது.இதில், அவ்வப்போது பெய்த மழை நீரால், சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்தித்து வந்தனர்.இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக நெடுஞ் சாலை துறை சார்பில் சீரமைப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.இது

கன மழை காரணமாக, பல நாட்கள் தேங்கிய மழை நீரால், நெடுஞ்சாலைகளின் பல இடங்களில் அரிப்பு ஏற்பட்டு, ஆங்காங்கே குண்டும் குழியுமாக மாறியது.

இதில், அவ்வப்போது பெய்த மழை நீரால், சாலையில் உள்ள மேடு பள்ளங்கள் தெரிவதில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்தித்து வந்தனர்.இதையடுத்து, கடந்த மூன்று நாட்களாக நெடுஞ் சாலை துறை சார்பில் சீரமைப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது.இது குறித்து, நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தென்சென்னை புறநகரில் உள்ள கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி சாலை, தரமணி- - வேளச்சேரி சாலை, வேளச்சேரி- - தாம்பரம் சாலை, மவுன்ட் - -மேடவாக்கம், மவுன்ட் - -வேளச்சேரி உள்வட்ட சாலை உள்ளிட்ட சாலைகளில் பள்ளங்கள் சீரமைப்பு பணி நடந்தது.கடந்த மூன்று நாட்களாக 100க்கும் மேற்பட்ட தொழிலாளர் உதவியுடன் சாலைகளில் உள்ள, 90 சதவீத பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X