ஏரிகளை பார்வையிட தடை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரிகளை பார்வையிட தடை

Added : நவ 18, 2021
Share
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.இந்த ஏரிகள், தற்போது நிரம்பி வழிகின்றன. நீர்வரத்து தொடரும் நிலையில், உபரி நீர் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. உள்ளூர் மக்கள், அதிகளவில் இந்த ஏரிகளுக்கு சென்று உபரிநீர் வெளியேற்றும் பணிகளை ஆர்வமுடன்



திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.இந்த ஏரிகள், தற்போது நிரம்பி வழிகின்றன. நீர்வரத்து தொடரும் நிலையில், உபரி நீர் வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

உள்ளூர் மக்கள், அதிகளவில் இந்த ஏரிகளுக்கு சென்று உபரிநீர் வெளியேற்றும் பணிகளை ஆர்வமுடன் பார்வையிடுகின்றனர்.இதனால், சுற்றுலா தலமாக ஏரிகள் மாறியுள்ளன. பலரும் அச்சமின்றி அபாயகரமான முறையில் மொபைல் போன்களில் 'செல்பி' எடுத்து வருகின்றனர்.இரண்டு நாட்களுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை முதல் அதி கன மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

எனவே, ஏரிகளில் இருந்து கூடுதல் உபரி நீரை வெளியேற்ற வேண்டும். அதிகளவில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் விபத்து அபாயம் உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரிகளை பார்வையிட பொதுமக்களுக்கு நீர்வளத் துறையினர் தடை விதித்துள்ளனர்.ஏரிகளுக்கு பொதுமக்கள் செல்லும் நுழைவாயில்கள் பூட்டப்பட்டுள்ளன; போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X