பொது செய்தி

இந்தியா

ஆறு மாத கணினி பயிற்சிக்கு டிச.17 வரை விண்ணப்பிக்கலாம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி, : ஆறு மாத கணினி பயிற்சிக்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தவர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குனர் பத்மாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மேம்பாட்டுக் கழகம் சார்பில் வில்லியனுார், கிருமாம்பாக்கம் ஆகிய இடங்களில் கணினி பயிற்சி மையங்கள், மத்திய அரசின்

புதுச்சேரி, : ஆறு மாத கணினி பயிற்சிக்கு பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இனத்தவர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குனர் பத்மாவதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மேம்பாட்டுக் கழகம் சார்பில் வில்லியனுார், கிருமாம்பாக்கம் ஆகிய இடங்களில் கணினி பயிற்சி மையங்கள், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகின்றன. இங்கு பல்வேறு வகையான ஆறு மாத தொழில்சார்ந்த கணினி பயிற்சி வகுப்புகள், மூன்று மாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.இதில் சேர, புதுச்சேரி மாநிலத்தை சார்ந்த பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். அடுத்த மாதம் 17ம் தேதி வரை சேர்க்கை நடைபெறும்.பயிற்சியில் சேர விரும்புவோர் வில்லியனூர் பயிற்சி மையம் - 04132666767, கிருமாம்பாக்கம் கணினி பயிற்சி மையம்--0413--2611776 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X