பொது செய்தி

தமிழ்நாடு

மழையிலும் 'மெட்ரோ' பணிகள் துரிதம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை : சென்னையில், கன மழையிலும் மெட்ரோ ரயில் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.இது குறித்து மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி கூறியதாவது:சென்னை மெட்ரோ ரயில், இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே, ஆறு இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.மாதவரம் -
 மழையிலும் 'மெட்ரோ' பணிகள் துரிதம்

சென்னை : சென்னையில், கன மழையிலும் மெட்ரோ ரயில் பணிகள் துரித கதியில் நடந்து வருகின்றன.இது குறித்து மெட்ரோ ரயில் திட்ட அதிகாரி கூறியதாவது:

சென்னை மெட்ரோ ரயில், இரண்டாவது கட்ட திட்டத்தில், 61 ஆயிரத்து, 843 கோடி ரூபாய் செலவில், மூன்று வழித்தடங்களில் 118.9 கி.மீ., மெட்ரோ பாதை அமைக்கப்படுகிறது. பூந்தமல்லி பைபாஸ் - கலங்கரை விளக்கம் இடையே, ஆறு இடங்களில் பணிகள் நடந்து வருகின்றன.மாதவரம் - சி.எம்.பி.டி., மூன்று இடங்களிலும், மாதவரம் - தரமணி இணைப்பு சாலை இடையே, ஐந்து இடங்களிலும் மெட்ரோ பாதை பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.முன்பு பெய்த பலத்த மழையின் போதும், மெட்ரோ பணிகள் நிறுத்தப்படவில்லை.

உரிய பாதுகாப்புடன் தொடர்ந்து நடந்தது. பணி நடக்கும் இடத்தில் மழை நீர் தேங்கிய இடங்களில் மட்டும் ஊழியர்களின் ஓய்வுக்காக அவ்வப்போது, பணிகள் சில மணி நேரம் நிறுத்தப்பட்டன. ஒப்பந்த நிறுவனங்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாட்டுடன் பணிகளை விரைவாக முடிக்க துரிதப்படுத்தியுள்ளன. சென்னையில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், மெட்ரோ பணிகள் முழுதுமாக நிறுத்தப்படாது.சூழ்நிலை மற்றும் பாதுகாப்புக்கு இடர்பாடு ஏற்படும் பட்சத்தில், தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மழை விட்டதும் மீண்டும் துவக்கப்படும்.இவ்வாறு அதிகாரி கூறினார்.சாலை பள்ளங்களால் அவதிபோரூர் - காட்டுப்பாக்கம் இடையே, மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்காக சாலையில், தற்காலிக இரும்பு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. இதில், துாண்கள் அமைக்கும் இடங்களில், வாகனங்கள் செல்வதற்காக ஒதுக்கப்பட்ட சாலையில், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகனங்கள் கடந்து செல்லவதற்கு தாமதமாகிறது. ராமச்சந்திரா மருத்துவமனை அருகிலும், காட்டுப்பாக்கம் நிலையம் அருகிலும், சாலையில் இரு ஓரங்களிலும் பள்ளம் ஏற்பட்டுள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X