தமிழ்நாடு

திறந்தவெளி கூவம் கால்வாயால் அகத்தியர் நகர் மக்கள் கடும் அவதி

Added : நவ 18, 2021
Share
Advertisement
வில்லவாக்கம் : திறந்தவெளி கூவம் கால்வாயில் இருந்து வெளி வரும் நச்சு வாயுவால், வில்லிவாக்கம் மக்கள் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.அண்ணா நகர் மண்டலம் 95வது வார்டில், வில்லிவாக்கம் அகத்தியர் நகர் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்த பகுதியில் பாடியில் இருந்து, ஐ.சி.எப்., நோக்கி, திறந்தவெளியில் கூவம்
 திறந்தவெளி கூவம் கால்வாயால் அகத்தியர் நகர் மக்கள் கடும் அவதி

வில்லவாக்கம் : திறந்தவெளி கூவம் கால்வாயில் இருந்து வெளி வரும் நச்சு வாயுவால், வில்லிவாக்கம் மக்கள் மர்ம காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

அண்ணா நகர் மண்டலம் 95வது வார்டில், வில்லிவாக்கம் அகத்தியர் நகர் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இந்த பகுதியில் பாடியில் இருந்து, ஐ.சி.எப்., நோக்கி, திறந்தவெளியில் கூவம் கால்வாய் செல்கிறது.இதில் இருந்து அடிக்கடி நச்சு வாயு வெளியேறுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர்.இது குறித்து, அகத்தியர் நகர் மக்கள் கூறியதாவது:பல ஆண்டுகள் கோரிக்கையை அடுத்து, அகத்தியர் நகர் பகுதியில் செல்லும் கூவம் கால்வாயில் குறிப்பிட்ட துாரம் மூடி அமைக்கப்பட்டது.

மீதமுள்ள இடங்கள் மூடப்படாததால், அவ்வப்போது வெளியேறும் வாயுவால், வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.குறிப்பாக, 'ஓ' பிளாக் பகுதியில் வசிப்போர், 'டெங்கு' உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் அவதிப்படுகின்றனர். அதுமட்டுமின்றி, வீட்டு உபயோக பொருட்களான 'ஏசி, பிரிஜ்' உள்ளிட்டவை பழுதடைகின்றன.இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. தேர்தலின்போது, வாக்குறுதி அளித்த எம்.எல்.ஏ.,வும் கண்டுக்கொள்வது இல்லை. கூவத்தால் உடல் உபாதைகள் ஏற்படுகிறதா வேறு ஏதாவது காரணங்களா என, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X