பொது செய்தி

இந்தியா

வரதட்சணை கேட்டு மனைவி சித்ரவதை இன்ஜினியர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : வரதட்சணை கேட்டு புதுமணப் பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர் . விழுப்புரம் மாவட்டம், குமாரகுப்பம் மூகாம்பிகை நகரில் வசிப்பவர் அழகர்,65. இவரது மகன் பாலசந்தர்,34. சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும், புதுச்சேரி முதலியார்பேட்டை உப்பளம் 3வது தெருவில் வசிக்கும் கவிதா, 31, என்பவருக்கும் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி

புதுச்சேரி : வரதட்சணை கேட்டு புதுமணப் பெண்ணை சித்ரவதை செய்த கணவர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர் . விழுப்புரம் மாவட்டம், குமாரகுப்பம் மூகாம்பிகை நகரில் வசிப்பவர் அழகர்,65. இவரது மகன் பாலசந்தர்,34. சாப்ட்வேர் இன்ஜினியரான இவருக்கும், புதுச்சேரி முதலியார்பேட்டை உப்பளம் 3வது தெருவில் வசிக்கும் கவிதா, 31, என்பவருக்கும் கடந்தாண்டு மார்ச் 24ம் தேதி திருமணம் நடந்தது.திருமணத்திற்கு முன் ரூ. 4.50 லட்சம் மணமகன் வீட்டிற்கு பெண் வீட்டார் வழங்கியுள்ளனர்.

திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை கேட்டு கவிதாவை, கணவர் பாலச்சந்தர், அவரது குடும்பத்தினர் சித்ரவதை செய்தனர்.இதனை தட்டிக்கேட்ட கவிதாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா முறையிட்டார். குடும்ப விவகாரம் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனை தொடர்ந்து அவர், புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்த, புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து கவிதாவின் கணவர் பாலசந்தர்,34, அவரது தந்தை அழகர்,65, தாய் கிரிஜா,55, சகோதரிகள் சுப்ரியா, மனுஷியா,21, அகத்தியா,19, உள்ளிட்ட 6 பேர் மீது, 9 பிரிவுகளில் போலீசார் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X