சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போன் பறிப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
மயிலாப்பூர் : இருவரிடம் மொபைல் போன் பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராயப்பேட்டை, புதுப்பேட்டை கார்டனைச் சேர்ந்தவர் பிரேம்சந்தர், 63; சுயதொழில் செய்பவர். நேற்று காலை, மயிலாப்பூர் ஆர்.கே., சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், மொபைல் போனை பறித்துச் சென்றனர்.இது குறித்து மயிலாப்பூர்

மயிலாப்பூர் : இருவரிடம் மொபைல் போன் பறித்த மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.ராயப்பேட்டை, புதுப்பேட்டை கார்டனைச் சேர்ந்தவர் பிரேம்சந்தர், 63; சுயதொழில் செய்பவர். நேற்று காலை, மயிலாப்பூர் ஆர்.கே., சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் இருவர், மொபைல் போனை பறித்துச் சென்றனர்.இது குறித்து மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். அதேபோல் மந்தைவெளி ஆர்.கே., மடம் சாலை வழியாக நடந்து சென்ற, ஷெனாய் நகரைச் சேர்ந்த சுப்ரியன், 21, என்பவரிடம், மர்மநபர்கள் மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

இது குறித்து அபிராமபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.இருவர் கைதுராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்தவர் லோகபிரியா, 25; தனியார் நிறுவன ஊழியர்.கடந்த 3ம் தேதி, நுங்கம்பாக்கம் கல்லுாரி சாலை அருகே, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், இவரது மொபைல் போனை பறித்துச் சென்றனர். நுங்கம்பாக்கம் போலீசாரின் விசாரணையில், மவுலிவாக்கத்தைச் சேர்ந்த அமீது, 24, மற்றும் 16 வயது சிறுவன் மொபைல் போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. நேற்று இருவரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X