சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரயில்வே ஊழியர் அடிதடி ஐ.சி.எப்.,பில் பரபரப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
ஐ.சி.எப். : ரயில்வே அலுவலகத்தில், நிரந்தர ஊழியரை தாக்கிய ஒப்பந்த தொழிலாளியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரேந்திர குமார், 28. அன்னனுாரில் தங்கி, பெரம்பூர் ரயில்வே கேரேஜ் பணிமனையில் டெக்னீஷியனாக பணிபுரிகிறார்.அதே பணிமனையில் ஒப்பந்த தொழிலாளியாக உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர சிங், 21, என்பவர் பணிபுரிகிறார்.இருவரும் நேற்று அதிகாலை

ஐ.சி.எப். : ரயில்வே அலுவலகத்தில், நிரந்தர ஊழியரை தாக்கிய ஒப்பந்த தொழிலாளியை, போலீசார் நேற்று கைது செய்தனர்.பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரேந்திர குமார், 28. அன்னனுாரில் தங்கி, பெரம்பூர் ரயில்வே கேரேஜ் பணிமனையில் டெக்னீஷியனாக பணிபுரிகிறார்

.அதே பணிமனையில் ஒப்பந்த தொழிலாளியாக உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த உபேந்திர சிங், 21, என்பவர் பணிபுரிகிறார்.இருவரும் நேற்று அதிகாலை பணியில் இருந்தபோது, வாய்தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, உபேந்திர சிங் தகாத வார்த்தைகளால் பேசி, பிரேந்திர குமாரை பலமாக தாக்கியுள்ளார். இது குறித்து, ஐ.சி.எப்., காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரித்து, உபேந்திர சிங்கை நேற்று கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X