பொது செய்தி

தமிழ்நாடு

'சித்த மருத்துவ பல்கலை இந்தாண்டுக்குள் துவக்கம்' : அமைச்சர் சுப்பிரமணியன்

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சென்னை; ''சென்னையில் சித்த மருத்துவ பல்கலை, இந்தாண்டு இறுதிக்குள் துவங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.நிலவேம்பு குடிநீர்சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும் 1,560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் வாயிலாக, வெள்ள

சென்னை; ''சென்னையில் சித்த மருத்துவ பல்கலை, இந்தாண்டு இறுதிக்குள் துவங்கப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.



latest tamil news


நிலவேம்பு குடிநீர்சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில், மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமை துவக்கி வைத்த அவர் அளித்த பேட்டி:தமிழகம் முழுதும் 1,560 இந்திய மருத்துவ சிகிச்சை மையங்கள் வாயிலாக, வெள்ள பாதிப்பு, டெங்கு பாதிப்புள்ள பகுதிகளில் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், மழைக்கால நோய்களுக்கான மருந்துகள் வழங்கப்பட உள்ளது.சென்னையில் 50 வாகனங்கள் வாயிலாக சேவை வழங்கப்பட உள்ளது. இந்த வாகனங்களில், தாளிசாதி சூரணம் கேப்சூல், தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, பெய்ன் பாம், பிண்ட் தைலம், கற்பூராதி தைலம், மத்தன் தைலம், வங்க விரண களிம்பு ஆகிய மருந்துகள் மக்களுக்கு வழங்கப்பட உள்ளன.

கடந்த மே 7க்கு பின், 100க்கும் மேற்பட்ட இடங்களில், கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.இந்த மையங்களில், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நலமுடன் வீடு திரும்பியுள்ளனர்.பேரிடர் கால பணி என்பது கடினம் தான். சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். அகில இந்திய ஒதுக்கீடு மருத்துவ கவுன்சிலிங் முடிந்த பின், தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெறும்.சென்னையில், சித்த மருத்துவ பல்கலையை இந்தாண்டு இறுதிக்குள் முதல்வர் துவக்கி வைப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news


மாதவரத்தில் 25 ஏக்கர்இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் கணேஷ் கூறுகையில், ''அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி கட்டடம், சித்த மருத்துவ பல்கலையாக மாற்றப்படுகிறது.''இங்கு, தற்காலிகமாக பல்கலை செயல்படும். மாதவரத்தில் 25 ஏக்கரில், சித்த மருத்துவ பல்கலை அமைய உள்ளது,'' என்றார்.நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், அண்ணா நகர் எம்.எல்.ஏ., மோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
18-நவ-202112:13:05 IST Report Abuse
raja பேருகூட செலெக்ட்டு பண்ணியாச்சு....தாத்தா முத்து மகன் கருணா பேரன் ஸ்தாலினு கொள்ளுப்பேரன் உதய எள்ளுப்பேரன் இன்ப சித்த மருத்துவ பல்கலைக்கழகம்.....எப்புடி..
Rate this:
RAVIKUMAR - chennai,இந்தியா
18-நவ-202112:43:04 IST Report Abuse
RAVIKUMARஐஸ் கட்டிய போட்டு அது மேலே உட்கார்துக்கோ ......
Rate this:
raja - Cotonou,பெனின்
18-நவ-202113:50:02 IST Report Abuse
rajaஉனக்கு எறிஞ்சா நான் எதுக்கு ஐஸ் கட்டிமேல உக்காரனும்?... ஓஹோ அவனுவோ சித்தவைத்தியம் இப்படித்தானா....கருணாஸு ஒருபடத்துல ஆட்டோ ஸ்டார்ட் ஆகலைன்னு அடுத்தவண்டியோட கண்ணாடியை திருரப்ப ஸ்டார்ட் ஆயிடுமே அதுபோலவா? என்னே ஒரு மூளை... ஆஹா ஒஹோஒ..ஆஹாஹா......
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
18-நவ-202115:31:37 IST Report Abuse
DVRRமடியல் அரசு சுப்பு ஆமா ஒனக்கு சித்த மருத்துவமனை ஏதாவது தெரியுமா இல்லே ஒன் பாட்டி வெற்றிலையை சின்ன உரலில் இடிப்பதை தான் சித்த மருத்துவம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றாயா??? அப்புறம் மேலே இந்த மருத்துவ பல்கலைக்கு பேர் சரியா எழுதியிருக்கு அதையே போட்டிடலாம்னு மடியல் அரசில் முடிவெடுங்கள் இல்லேன்னா சின்ன பேரா வேணும்னா "மடியல் அரசு சித்த மருத்துவ பல்கொலை கழகம்" இதை வைக்கலாம்....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-நவ-202108:27:05 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள். குறிப்பாக கிராமப்புறங்களில் அதிலும் மலைவாழ் மக்கள் புற்று நோய்க்கு மாமருந்து கொடுத்து ஆங்கில மருத்துவர்களால் கைவிடப்பட்டவர்களை முழுமையாக குணமாக்குகிறார்கள் அவர்களிடம் அந்த மருந்துகளை வாங்கி அதையும் ஆராய்ச்சி செய்து பயனாளிகளுக்கு கொடுக்கலாம் அதே போன்று தீர்க்க முடியாத வியாதிகளையும் தீர்க்க முன்வரவேண்டும், டெங்கு போன்ற நோய்களுக்கு உடனடியாக தீர்வு கொண்டவர்களும் சித்த மருத்துவர்களே ஆகவே தற்போது பழக்கத்தில் உள்ள மாமருந்துகளையும் அதன் சக்திகளையும் பழக்கத்துக்கும் கொண்டுவர ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X