பொது செய்தி

தமிழ்நாடு

விபத்தில் கணவர் இறப்பு மனைவிக்கு ரூ.17 லட்சம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
சென்னை, நவ. 18--விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு, 17.47 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.சென்னை, காரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பால்மோனி, 49; பெட்ரோல் பங்க் ஊழியர். இவர் கன்னியாகுமரி மாவட்டம் புலிபனாம் சர்ச் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அதிவேகமாக வந்த லாரி பால்மோனி மீது மோதியது.இதில் பலத்த


சென்னை, நவ. 18--விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு, 17.47 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது

.சென்னை, காரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பால்மோனி, 49; பெட்ரோல் பங்க் ஊழியர். இவர் கன்னியாகுமரி மாவட்டம் புலிபனாம் சர்ச் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அதிவேகமாக வந்த லாரி பால்மோனி மீது மோதியது.இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவர் இறப்புக்கு, இழப்பீடு வழங்கக்கோரி பால்மோனியின் மனைவி வசந்தா, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.வேல்ராஜ், 'மனுதாரருக்கு இழப்பீடாக, 17.47 லட்சம் ரூபாயை ஆண்டுக்கு, 7.5 சதவீத வட்டியுடன், தி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X