பொது செய்தி

தமிழ்நாடு

காசிமேடில் படகுகள் சேதம் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

Added : நவ 18, 2021
Share
Advertisement
காசிமேடு : நவ. 18--காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கன மழையால் சேதமடைந்த படகுகளை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.கடந்த வாரம் பெய்த கன மழையால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த படகுகள் குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.அப்போது, பாதிப்புகள்
 காசிமேடில் படகுகள் சேதம் அமைச்சர்கள் நேரில் ஆய்வு

காசிமேடு : நவ. 18--காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், கன மழையால் சேதமடைந்த படகுகளை, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.கடந்த வாரம் பெய்த கன மழையால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த படகுகள் குறித்து, மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது, பாதிப்புகள் குறித்து மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவ அமைப்பினரிடம் கேட்டறிந்தனர்.பின், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:கன மழையால், காசிமேடு மீன்பிடி துறை முகம் உட்பட அனைத்து மீன்பிடி துறைமுகங்களின் சேதங்களை ஆய்வு செய்ய, முதல்வர் உத்தரவிட்டதால், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆய்வு செய்துள்ளோம்.படகுகள் சேத விவரத்தை அறிக்கையாக தயார் செய்து,

முதல்வர் பார்வைக்கு எடுத்துச் செல்வோம்.மீனவர்களுக்கான இழப்பீடு குறித்து, முதல்வர் தெரிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.ஆய்வின் போது, மீன்வளத் துறை இயக்குனர் பழனிசாமி, வடசென்னை எம்.பி., கலாநிதி, எம்.எல்.ஏ.,க்கள் எபினேசர், ஐட்ரீம் மூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.இது குறித்து, காசிமேடு மீனவர்கள் கூறுகையில், 'படகுகள் சேதம் குறித்து உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்து, சேதமடைந்த படகுகளுக்கு அரசு முழு நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X