உணவு பதப்படுத்தும் திட்டம் செயல்படுத்த பிப்டிக் நிறுவனத்திற்கு ரூ.1.45 கோடி

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : மத்திய அரசின் 'குழந்தைகள் பாதுகாப்பு சேவை' திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு முதல் தவணையாக ரூ.1.29 கோடி நிதியுதவி அளிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.கவர்னர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி போலீஸ் துறையை சேர்ந்த போலீசாருக்கு இணையாக ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு சிறப்பு நிலை துணை உதவி

புதுச்சேரி : மத்திய அரசின் 'குழந்தைகள் பாதுகாப்பு சேவை' திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு முதல் தவணையாக ரூ.1.29 கோடி நிதியுதவி அளிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.கவர்னர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி போலீஸ் துறையை சேர்ந்த போலீசாருக்கு இணையாக ஐ.ஆர்.பி.என்., போலீசாருக்கு சிறப்பு நிலை துணை உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்பு நிலை உதவி ஆய்வாளர் பதவிகள் வழங்கிட கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.இந்த கல்வியாண்டு முதல் காரைக்கால் அண்ணா அரசு கலை - அறிவியல் கல்லுாரியில் 60 இடங்கள் கொண்ட பி.ஏ., ஆங்கிலம் பட்டப்படிப்பு தொடங்கவும், காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லுாரியில் பி.காம்., பட்டப் படிப்பில் கூடுதலாக 64 இடங்களில் சேர்க்கை நடத்தவும் அனுமதி அளித்துள்ளார். கடந்த 2020- - 21ம் நிதியாண்டில், மத்திய அரசின் குழந்தைகள் பாதுகாப்பு சேவை திட்டத்தை செயல்படுத்த புதுச்சேரி மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்திற்கு முதல் தவணையாக ரூ. 1.29 கோடி நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆலோசனைப்படி நீதிபதி ராஜாவை புதுச்சேரி யூனியன் பிரதேச சட்ட சேவைகள் ஆணையத்தின் நிர்வாகத் தலைவராக நியமிக்க அனுமதி அளித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில், பிரதம மந்திரி குறு-உணவுப் பதப்படுத்தும் நிறுவனத் திட்டத்தை செயல்படுத்திட பிப்டிக் நிறுவனத்திற்கு ரூ. 1.45 கோடி நிதி வழங்க அனுமதி அளித்துள்ளார். பாகூர் கொம்யூன் பகுதியை 2.10.2021 முதல் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் இல்லாத பகுதியாக அறிவிக்கவும் ஒப்புதல் வழங்கியுள்ளார். .இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X