பொது செய்தி

தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் 2,000 கன அடி நீர் திறப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
குன்றத்துார் : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து, செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேற்றம், 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதை அடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால், உபரி நீர் வெளியேற்றம், 250 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்றைய

குன்றத்துார் : சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளதை அடுத்து, செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் வெளியேற்றம், 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதை அடுத்து, உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

சில நாட்களாக மழை இல்லாத காரணத்தால், உபரி நீர் வெளியேற்றம், 250 கன அடியாக குறைக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம், 21.33 அடியாக இருந்தது.நீர்வரத்து, 405 கன அடியாகவும், மொத்த கொள்ளளவு 2.9 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கன மழை பெய்வதற்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதையடுத்து, உபரி நீர் வெளியேற்றம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, 2,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.புழல் ஏரியில் இருந்தும் நேற்று, ௨,௦௦௦ கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X