சரக்கு வாகனங்களில் பயணிக்க வேண்டாம்; போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''சபரிமலை செல்லும் பக்தர்கள், எக்காரணம் கொண்டும் சரக்கு வாகனங்களில் பயணிக்க வேண்டாம்'' என புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவுறுத்தி உள்ளது.இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சபரி மலைக்கு செல்லும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், சரக்கு வாகனம், திறந்த


புதுச்சேரி : ''சபரிமலை செல்லும் பக்தர்கள், எக்காரணம் கொண்டும் சரக்கு வாகனங்களில் பயணிக்க வேண்டாம்'' என புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவுறுத்தி உள்ளது.இதுகுறித்து போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் பக்தர்கள் சபரி மலைக்கு செல்லும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

இதற்கு முக்கிய காரணம், சரக்கு வாகனம், திறந்த வெளி வாகனம், இயந்திரம் பழுதுள்ள வாகனங்களில் பயணிப்பதே. டிரைவர்கள் சரியான ஓய்வின்றி வாகனங்களை ஓட்டுவதாலும் விபத்து ஏற்படுகிறது.எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் சரக்கு வாகனங்களில் பயணிக்க வேண்டாம். வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். தகுதிச்சான்று இல்லாத வாகனங்களில் பயணிப்பது ஆபத்தானது மட்டுமன்றி, சாலை விதிக்கு புறம்பானதும், தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, வாகன உரிமையாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் டிரைவர்கள் மேற்கூறிய வாகனங்களை பயன்படுத்த வேண்டாம். மீறினால், போக்குவரத்துத் துறை மற்றும் போக்குவரத்து போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X