இந்தியா

புதுச்சேரியில் மீண்டும் கனமழை... எச்சரிக்கை தயார் நிலையில் அரசு நிர்வாகம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புதுச்சேரியில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு துவக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, பனி காலமான பிப்ரவரி மாதத்தில் ஒரே நாளில் 21 செ.மீ., மழை கொட்டியது. இதேபோன்று ஆண்டு முழுவதும் பரவலாக மழை பெய்தது. கடந்த 26ம் தேதி
 புதுச்சேரியில் மீண்டும் கனமழை... எச்சரிக்கை    தயார் நிலையில் அரசு நிர்வாகம்

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்று மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

புதுச்சேரியில் முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தாண்டு துவக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, பனி காலமான பிப்ரவரி மாதத்தில் ஒரே நாளில் 21 செ.மீ., மழை கொட்டியது. இதேபோன்று ஆண்டு முழுவதும் பரவலாக மழை பெய்தது. கடந்த 26ம் தேதி வடகிழக்கு பருவமழை துவங்கியது. அதற்கு முன்பாகவே புதுச்சேரியில் ஆண்டு சராசரி மழை அளவான 130 செ.மீ., கடந்தது அதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை கொட்டியது.

வடகிழக்கு பருவமழை துவங்கிய இரு வாரத்தில் 49.6 செ.மீ., மழை கொட்டியது. இதனால், நகரமே வெள்ளக்காடானது. விளை நிலங்களில் தண்ணீர் புகுந்ததால், பயிர்கள் மூழ்கின. மக்கள் வீடுகளில் முடங்கினர். கடந்த நான்கு நாட்களாக மழை ஓய்ந்துள்ளதால், குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் சூழ்ந்த தண்ணீர் வடிந்து, மக்கள் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கி உள்ளனர்.இந்நிலையில், 'கடந்த 13ம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மெல்ல தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இது, இன்று தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழகத்தை நெருங்கும். இதனால், வட தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.ஏற்கனவே, ஆண்டு சராசரி மழை அளவை விட 43 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளதால், மாநிலத்தில் மொத்தமுள்ள 84 ஏரிகளில் 62 ஏரிகள் நிரம்பியுள்ளன.

26 படுகை அணைகளும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் இன்றும், நாளையும் கனமழை பெய்தால் மீண்டும் நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கும் சூழல் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து, மழையை எதிர்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் இருக்குமாறு, பேரிடர் மேலாண்மை துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், நீர் நிலைகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அறிவுறுத்தி உள்ளது.

அதேபோன்று, வங்கக் கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், படகு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லவும் மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X