பொது செய்தி

இந்தியா

கோர்ட் உத்தரவால் ஜப்தி நடவடிக்கை புதுச்சேரி பல்கலை.,யில் பரபரப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தனியார் நிறுவனத்திற்கு ரூ. 3.42 கோடி ஒப்பந்த தொகையை வழங்காததால், புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தரின் கார், 200 கம்ப்யூட்டர்கள் உள்பட 18 வகையான பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது. புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் மத்திய பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இங்கு, இன்ஜினியரிங் வகுப்பறைகளை மேம்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 2015ல் டெண்டர் கோரியது.

புதுச்சேரி : தனியார் நிறுவனத்திற்கு ரூ. 3.42 கோடி ஒப்பந்த தொகையை வழங்காததால், புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தரின் கார், 200 கம்ப்யூட்டர்கள் உள்பட 18 வகையான பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி அடுத்த காலாப்பட்டில் மத்திய பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. இங்கு, இன்ஜினியரிங் வகுப்பறைகளை மேம்படுத்த பல்கலைக்கழக நிர்வாகம் கடந்த 2015ல் டெண்டர் கோரியது. லண்டனை தலைமையிடமாக கொண்ட இன்போபிளஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம், ரூ. 2 கோடியே 92 லட்சம் மதிப்பில், பல்கலைக் கழகத்தில் முப்பரிமாண வகுப்புகளுக்கான மென்பொருட்களை ஏற்படுத்திக் கொடுத்தது. இதற்கான தொகையை பல்கலைக்கழகம் தராததால், அந்நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கு நடுவர் மன்ற தீர்ப்பாயத்திற்கு மாற்றப்பட்டு, பல்கலைக்கழகம் ஒப்பந்தம் செய்தபடி, வட்டியுடன் சேர்த்து 3 கோடியே 42 லட்சம் ரூபாயை நிறுவனத்திற்கு வழங்க, 2019, அக்டோபரில் உத்தரவிட்டது. அதன்பிறகும் பணம் வழங்கப்படவில்லை.அந்நிறுவனம், புதுச்சேரி இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில், கடந்த மார்ச் மாதம் வழக்கு தொடர்ந்தது. பல்கலைக் கழக பஸ்கள், கார்கள் மற்றும் 200 கம்ப்யூட்டர்கள் என மொத்தம் 3.42 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய உத்தரவிடக் கோரி அந்நிறுவனம் மனு தாக்கல் செய்திருந்தது.இவ்வழக்கு, கடந்த மாதம் 27ம் தேதி நீதிபதி இளவரசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் ஆகியோரது கார்கள், பஸ்கள், 200 கம்ப்யூட்டர்கள் என 18 வகையான பொருட்களை ஜப்தி செய்ய, நீதிபதி உத்தரவிட்டார். கோர்ட் அமீனா வெங்கட், நேற்று பல்கலைக்கழக பதிவாளரை சந்தித்து ஜப்தி உத்தரவை வழங்கினார். இதனை தொடர்ந்து பதிவாளர், தனியார் நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு நாட்களுக்குள் நிறுவனத்திற்கு தொகை பட்டுவாடா செய்யப்படும் என பதிவாளர் கூறியதற்கு தனியார் நிறுவன அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.இதை ஏற்ற கோர்ட் அமீனா, ஜப்தி செய்ய வேண்டிய பொருட்களை ஆய்வு செய்து விட்டு, புறப்பட்டுச் சென்றார்.ஜப்தி நடவடிக்கையால் பல்கலை,, வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X