இந்தியா

தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
புதுச்சேரி : தேசிய இளைஞர் விருதுக்கு,நாளைக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி விளையாட்டு மற்றும் இளைஞர் நலம் துணை இயக்குநர் சிவக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு;பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு, ஆண்டுதோறும் மத்திய அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறையால், தேசிய இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது, தேசிய முன்னேற்றம் மற்றும் சமூகப் பணிகளில் இளைஞர் முன்னேற்றத்திற்கான சுகாதாரம், ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு, கலாசாரம், மனித உரிமைகள் ஊக்குவிப்பு, கலை மற்றும் இலக்கியம், சுற்றுலா, பாரம்பரிய மருத்துவம், செயலாற்றும் குடிமக்கள், சமூக சேவை, விளையாட்டு மற்றும் கல்வியில் சிறந்து விளங்குதல், திறன் கற்றலில் சிறந்து விளங்கும் தனி நபர் அல்லது அமைப்புக்கு வழங்கப்படும். 2019-20 ஆண்டிற்கான தேசிய இளைஞர் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பத்தை https://innovate.mygov.in/national-youth- awards-2020 என்ற இணையதளத்தில் நாளை 19ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X