பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய கட்டடத்தில் விரிசல் ஆவணங்களை காப்பதில் சிக்கல்

Added : நவ 18, 2021
Share
Advertisement
திருப்போரூர் : திருப்போரூர் மின் வாரிய அலுவலக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், மழை நேரத்தில் கணினி, ஆவணங்களை காப்பதில் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.திருப்போரூர் துணை மின் நிலைய கட்டடத்தில், உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இதில் பொறியாளர் அறை, மின் கட்டண மையம், அலுவலக அறைகள் உள்ளன.திருப்போரூர், தண்டலம், காலவாக்கம் உள்ளிட்ட

திருப்போரூர் : திருப்போரூர் மின் வாரிய அலுவலக கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், மழை நேரத்தில் கணினி, ஆவணங்களை காப்பதில் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.

திருப்போரூர் துணை மின் நிலைய கட்டடத்தில், உதவி பொறியாளர் மற்றும் உதவி செயற்பொறியாளர் அலுவலகம் செயல்படுகிறது. இதில் பொறியாளர் அறை, மின் கட்டண மையம், அலுவலக அறைகள் உள்ளன.திருப்போரூர், தண்டலம், காலவாக்கம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள, 18 ஆயிரம் மின் இணைப்புகள், இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் இக்கட்டடம் கட்டப்பட்டதால் பழுதடைந்து, விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இக்கட்டடத்தின் உள்புற கூரை, ஆங்காங்கே பெயர்ந்து, பணி நேரத்தில் ஊழியர்கள் மீது விழுந்து, ஆபத்தை ஏற்படுத்துகிறது.மேலும் மழை நேரத்தில் கணினி, பிரின்டர் மற்றும் முக்கிய ஆவணங்கள் நனைந்து பாதிப்பு ஏற்படுகிறது.இதனால், கணினி அடிக்கடி பழுதடைதலும், ஆவணங்கள் பாதுகாக்க முடியாமலும், போதிய இடவசதி இல்லாமலும் ஊழியர்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, மேற்கண்ட மின் வாரிய அலுவலகத்தை சீரமைக்க அல்லது புதிய கட்டடத்தை ஏற்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X