பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்தலசயனர் கோவிலில் வரும் 21ல் பாலாலயம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேச வைணவ கோவில்களில், 63ம் கோவிலாகவும் சிறப்பு பெற்றது.கோவிலில் ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சுவாமியர் வீற்று, பக்தர்கள் தரிசிக்கின்றனர்.விஜயநகர பராங்குச மன்னர் அமைத்த கோவிலின் கும்பாபிஷேகம், 1998ல்

மாமல்லபுரம் : செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், தமிழக ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வகிக்கும் ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது.

108 திவ்ய தேச வைணவ கோவில்களில், 63ம் கோவிலாகவும் சிறப்பு பெற்றது.கோவிலில் ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள் உள்ளிட்ட சுவாமியர் வீற்று, பக்தர்கள் தரிசிக்கின்றனர்.விஜயநகர பராங்குச மன்னர் அமைத்த கோவிலின் கும்பாபிஷேகம், 1998ல் நடத்தப்பட்டது. 23 ஆண்டுகள் கடந்தும், அடுத்தடுத்த கும்பாபிஷேகம்நடைபெறவில்லை.

இதுகுறித்து நம் நாளிதழில், தொடர்ந்து செய்தி வெளியிடப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறை, கோவிலை புதுப்பிக்க உயர் நீதிமன்ற குழுவிடம் அங்கீகாரம் பெற்றது. தற்போது, முதல்கட்ட ஒதுக்கீடு நிதி, 32.54 லட்சம் ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் துவக்கவுள்ளது. இதற்காக கோவிலில்,வரும் 21ம் தேதி பாலாலயம் நடத்தி, 19ம் தேதி பிற்பகல் முதல், மூலவர் தரிசன வழிபாட்டிற்கு, பக்தர்களுக்கு அனுமதியில்லை என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X