பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பி வழியும் நீர்நிலைகள்

Added : நவ 18, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : வடகிழக்கு பருவ மழையால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், உத்திரமேரூர் வட்டார விவசாயிகள், விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.உத்திரமேரூர் ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 96 ஏரிகளில், 50 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டுப்பாட்டில் 130 ஏரிகளும்
 நிரம்பி வழியும் நீர்நிலைகள்

உத்திரமேரூர் : வடகிழக்கு பருவ மழையால் ஏரி, குளம், கிணறு உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், உத்திரமேரூர் வட்டார விவசாயிகள், விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

உத்திரமேரூர் ஒன்றியத்தில் பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 96 ஏரிகளில், 50 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை கட்டுப்பாட்டில் 130 ஏரிகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.உத்திரமேரூர் ஏரி மற்றும் செய்யாற்றை ஒட்டியுள்ள விவசாய கிணறுகளும் நிரம்பி ததும்புகின்றன.

இதனால், மகிழ்ச்சியடைந்த உத்திரமேரூர் வட்டார விவசாயிகள், பின்சம்பா மற்றும் நவரை பட்டங்களில், கோ 51, ஆடுதுறை 37, குண்டு ரக நெல் சாகுபடி செய்வதற்காக விவசாய நிலங்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதன்படி கம்மாளம்பூண்டி, குப்பையநல்லுார், மணித்தோட்டம் உள்ளிட்டபகுதிகளில் நிலத்தில் ஏர் உழுதல், வரப்பு அண்டை வெட்டுதல், நிலத்தை சமன் செய்தல், உரமிடுதல், நாற்றுநடுதல் உள்ளிட்ட வேலைகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அதேபோல், இயந்திர முறையில் நாற்று நடவு செய்வதற்காக, குழித்தட்டுகளில் நாற்றுகள் தயார் செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X