பழங்குடி மக்களின் மாவட்டங்களில் மேம்பாட்டு பணிகளுக்கு ஒப்புதல்

Updated : நவ 18, 2021 | Added : நவ 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியவையாக 'நிடி ஆயோக்' தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மத்திய
Union Cabinet, PM Modi, Tribal Areas, Anurag Thakur, Prime Minister, Narendra Modi, PMGSY

புதுடில்லி : பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்கள், சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியவையாக 'நிடி ஆயோக்' தரப்பில் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இம்மாவட்டங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


latest tamil news



இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கூறியதாவது: பழங்குடியினர் அதிகம் வசிக்கும் 44 மாவட்டங்களில் பிரதமரின் 'கிராமின் சதக் யோஜனா' திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.அங்கு 14 ஆயிரத்து 041 கி.மீ., சாலை அமைப்பதுடன் 2,626 பாலங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான திட்டமதிப்பு 33 ஆயிரத்து 822 கோடி ரூபாய்.

இதில் 22 ஆயிரத்து 978 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும்.ஆந்திரா, சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா உட்பட ஐந்து மாநிலங்களில் 7,287 கிராமங்களில் தொலைதொடர்பு சேவை கோபுரங்கள் அமைக்கப்படும். இதன் வாயிலாக லட்சக்கணக்கானோர் இணைய சேவை பெறுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
18-நவ-202116:56:27 IST Report Abuse
Samathuvan பழங்குடி என்ற வார்த்தையை கேட்டு இந்த ரெண்டு ஜீ களோட முகத்தை கொஞ்சம் பாருங்க. இப்போ விளங்குதா இவர்கள் பழங்குடி மேல வைத்து இருக்கும் அதீத பாசத்தை.
Rate this:
Cancel
சீனி - Bangalore,இந்தியா
18-நவ-202108:38:03 IST Report Abuse
சீனி உலகின் அதிவேக வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் மாற்றம், புதிய வன சட்டங்கள் காரணமாக வறுமையில் உள்ள பல மலை கிராமங்கள் தான் இன்று மதமாற்ற கும்பலின் முக்கிய தளமாக உள்ளன. அங்கே அடிப்படை கட்டமைப்பு, தொழில் வளர்ச்சி மற்றும், மத மற்றும் கலாச்சார பாதுகாப்புக்கு அரசு உறுதி செய்யவேண்டும். முக்கியமாக இந்து முன்னணி, வாரம் ஒருமுறை பழங்குடிகள், பூர்வகுடிகளை, பட்டியலினத்தவர்களை சந்தித்து குறை கேட்கவேண்டும், அவர்கள் கலாச்சாரத்தையும் பாதுக்காக்க முயற்சி எடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
18-நவ-202107:50:47 IST Report Abuse
அப்புசாமி பெருங்குடி, புதுக்குடியினரை எல்லாம் உசத்தி எங்கேயோ கொண்டு போயாச்சு. இப்போ பழங்குடினரை ஒசத்தப் போறாங்கோ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X