பொது செய்தி

தமிழ்நாடு

மீனவர்கள் போக்குவரத்திற்கு கல்பாக்கம் வாயில் திறப்பு

Added : நவ 18, 2021
Share
Advertisement
கல்பாக்கம் : கல்பாக்கம் நகரியத்தில் மூடப்பட்ட நுழைவாயில், மீனவர்கள் போக்குவரத்திற்காக, நேற்று திறக்கப்பட்டது.அணுசக்தி துறையினர், கல்பாக்கம் நகரிய பகுதியில் வசிக்கின்றனர். இங்குள்ள வசிப்பிட வளாக பகுதிகள், முன்பு திறந்தவெளி பகுதியாக அமைந்து, பாதுகாப்பு கேள்விக்குறியானது. வீட்டில் கொள்ளை, இருசக்கர வாகன திருட்டு அதிகரித்தது.பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு பகுதிக்கும்,

கல்பாக்கம் : கல்பாக்கம் நகரியத்தில் மூடப்பட்ட நுழைவாயில், மீனவர்கள் போக்குவரத்திற்காக, நேற்று திறக்கப்பட்டது.அணுசக்தி துறையினர், கல்பாக்கம் நகரிய பகுதியில் வசிக்கின்றனர்.

இங்குள்ள வசிப்பிட வளாக பகுதிகள், முன்பு திறந்தவெளி பகுதியாக அமைந்து, பாதுகாப்பு கேள்விக்குறியானது. வீட்டில் கொள்ளை, இருசக்கர வாகன திருட்டு அதிகரித்தது.பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு பகுதிக்கும், சுற்றுப்புறத் தடுப்பு, தனித்தனி வாயில்கள் அமைக்கப்பட்டன. பிரதான சாலைகளில், முக்கிய தெருக்கள் நுழைவிடத்தில், பெரிய நுழைவாயில் அமைத்து, இரு ஆண்டுகளுக்கு முன், நுழைவு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

பாரத ஸ்டேட் வங்கி, சிறிய வணிக வளாகம், வட்ட சாலை உள்ளிட்ட பகுதிகளின் நுழைவாயில்கள், நிரந்தரமாக மூடப்பட்டன.வணிக வளாக பகுதி நுழைவாயில் மூடியதால், இவ்வழியே சென்று வந்த புதுப்பட்டினம், வாயலுார் உய்யாலிகுப்பம் மீனவர்கள், சுற்றுப்பாதையில் சென்று அவதிப்பட்டனர்.

இதையடுத்து புதுப்பட்டினம் ஊராட்சி தலைவர் காயத்ரி, ஒன்றிய கவுன்சிலர்கள் தனபால், ஆஷாபிவி காதர் உசேன் உள்ளிட்டோர், வாயில்களை திறக்க கோரி, இந்திரா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமனிடம் வலியுறுத்தினர். இதையடுத்து, மீனவர்கள் போக்குவரத்திற்கான வாயில் மட்டும், நேற்று திறக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X