பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் பகுதியில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : நவ 18, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரம் சட்டசபை தொகுதி கிராமங்களில் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.விழுப்புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியம், அகரம், நரசிங்கபுரம் மலட்டாறு, மோட்சக்குளம் திருக்குளம், சின்னக்கள்ளிப்பட்டு தென்பெண்ணையாறு தடுப்பணை பகுதிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, மலட்டாறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்தை ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் சட்டசபை தொகுதி கிராமங்களில் எம்.எல்.ஏ., ஆய்வு மேற்கொண்டார்.விழுப்புரம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியம், அகரம், நரசிங்கபுரம் மலட்டாறு, மோட்சக்குளம் திருக்குளம், சின்னக்கள்ளிப்பட்டு தென்பெண்ணையாறு தடுப்பணை பகுதிகளை லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது, மலட்டாறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் வரத்தை ஆய்வு செய்து, கரைகளை பலப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மலட்டாறு மற்றும் தென்பெண்ணை ஆற்றில் தேவைப்படும் இடங்களில் தடுப்பணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து, கொங்கமேட்டில் மழையால் வீடு சேதமடைந்த சிவபாலன், சக்திவேல் குடும்பத்திற்கு அரசின் நிவாரண உதவிகளை வழங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் பிரபாகரன், பேரூராட்சி செயலாளர் ஜீவா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அன்பரசு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X