பொது செய்தி

தமிழ்நாடு

பாலாறு தரைப்பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவக்கம்

Added : நவ 18, 2021
Share
Advertisement
வாலாஜாபாத் : பாலாற்றில் வெள்ளம் குறைந்ததால், வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தின் மீது, வாகன போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.வாலாஜாபாதில் இருந்து, பாலாறு தரைப்பாலம் வழியாக, அவளூர் கிராமத்திற்கு செல்லும், 1.5 கி.மீ., நீள தரைப்பாலம் உள்ளது.இதன் வழியாக அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியான்குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம், கம்மராஜபுரம், இளையனார்வேலுார் உள்ளிட்ட பல

வாலாஜாபாத் : பாலாற்றில் வெள்ளம் குறைந்ததால், வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தின் மீது, வாகன போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டு உள்ளது.

வாலாஜாபாதில் இருந்து, பாலாறு தரைப்பாலம் வழியாக, அவளூர் கிராமத்திற்கு செல்லும், 1.5 கி.மீ., நீள தரைப்பாலம் உள்ளது.இதன் வழியாக அங்கம்பாக்கம், அவளூர், கன்னடியான்குடிசை, கணபதிபுரம், மல்லிகாபுரம், கம்மராஜபுரம், இளையனார்வேலுார் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு, பொதுமக்கள் பயணிக்கின்றனர்.சமீபத்தில், பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாலாஜாபாத் - அவளூர் இடையே, வாகன போக்குவரத்தை நான்கு நாட்களாக போலீசார் தடை செய்தனர்.நேற்று, பாலாற்றில் வெள்ளம் குறைந்ததால், வாலாஜாபாத் - அவளூர் தரைப்பாலத்தின் மீது, சிறிய ரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை இயக்க, போலீசார் அனுமதித்து உள்ளனர்.இதனால், பல கி.மீ., துாரம் சுற்றி வரத்தேவைஇல்லை என, அவளூர் கிராமமக்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X