பொது செய்தி

தமிழ்நாடு

திண்டுக்கல் மாணவி தேசிய சாதனை!

Added : நவ 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
திண்டுக்கல் : அகில இந்திய அளவிலான வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வில் -ஐ.சி.ஏ.ஆர்., திண்டுக்கல் மாணவி அ.ஓவியா 23, தேசிய அளவில் 2ம் இடம், தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.மேற்கண்ட அமைப்பு கால்நடைத் துறையில் பட்ட மேற்படிப்புக்காக இத்தேர்வை செப்.,17 ல் நடத்தியது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சாதனை படைத்த மாணவி ஓவியாவை புதுச்சேரி கவர்னர்
திண்டுக்கல் மாணவி தேசிய சாதனை!

திண்டுக்கல் : அகில இந்திய அளவிலான வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் தேர்வில் -ஐ.சி.ஏ.ஆர்., திண்டுக்கல் மாணவி அ.ஓவியா 23, தேசிய அளவில் 2ம் இடம், தமிழகத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

மேற்கண்ட அமைப்பு கால்நடைத் துறையில் பட்ட மேற்படிப்புக்காக இத்தேர்வை செப்.,17 ல் நடத்தியது. தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் சாதனை படைத்த மாணவி ஓவியாவை புதுச்சேரி கவர்னர் தமிழிசை, பேராசிரியர்கள் பாராட்டினர்.

ஓவியா கூறுகையில், ''இளங்கலை படிப்பின்போதே முதுகலை படிக்கும் எண்ணம் இருந்ததால் இத்தேர்வுக்கென புத்தகங்களை தயார்படுத்திக் கொண்டேன். எனது ஆசிரியர்கள், சீனியர் மாணவியர் எனக்கு வழிகாட்டினர். இதற்கென தனிப்பயிற்சி எதுவும் எடுக்கவில்லை. இரு மாதங்களாக இரவு 12:00 மணி வரை படித்தேன். 'டிவி' பார்ப்பதை தவிர்த்து விட்டேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-நவ-202112:24:35 IST Report Abuse
மலரின் மகள் சாதனை செய்வோரின் பெற்றோர் பெயர்களை எழுதுவது ஒரு சிறந்த மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மலரில் எத்துணையோ முறை படித்திருக்கிறேன். இன்னாரின் மகள் அல்லது மகன் என்று முதலில் குறிப்பிடுவார்கள். தங்கள் பிள்ளைகள் செய்யும் சாதனை செய்திகளில் பெற்றோரின் பெயர் வருவது அவர்களுக்கும் மனநிறைவை தரும். தங்களின் பெயரில் குழந்தைகள் என்று இருந்து சாதனைகள் வரும்போது பெற்றோரின் பெயர் குழந்தைகளின் பெயரோடு என்பது விவரிக்க முடியாத சந்தோசம்.
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
19-நவ-202112:18:18 IST Report Abuse
மலரின் மகள் வாழ்த்துகள் பெண்ணே ஆசிரியர்கள் மற்றும் சீனியர் மாணவிகளின் வழிகாட்டல்கள், புத்தகங்கள் சாதனைக்குரிய முக்கிய அம்சங்கள் என்று நிரூபித்திருக்கிறாய். இரடண்டும் அத்தியாவசியம் படிக்கும் ஆர்வத்தை வெற்றி சிகரத்தில் கொண்டு வைக்க. முதுநிலையிலும் சிறப்பாக செயல்படுவாய். செய்த சிந்தனையுடன் செய்யும் அனைத்தும் வெற்றி தரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X