எம்.எல்.ஏ., நிவாரண உதவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., நிவாரண உதவி

Added : நவ 18, 2021
Share
மயிலம் : மயிலம் அடுத்த வெங்கந்துாரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வெங்கந்துார் கிராமத்தில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் லதா ஞானசேகரன் என்பவரது வீடு பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவியாக 5,000 ரூபாய் மற்றும் அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப்
 எம்.எல்.ஏ., நிவாரண உதவி

மயிலம் : மயிலம் அடுத்த வெங்கந்துாரில் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.வெங்கந்துார் கிராமத்தில் சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் லதா ஞானசேகரன் என்பவரது வீடு பாதிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் நிவாரண உதவியாக 5,000 ரூபாய் மற்றும் அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கினார். வி.ஏ.ஓ., ராஜாமணி, பா.ம.க., ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், ராஜி, விஷ்ணு, ஊராட்சி தலைவர் வசந்தா விநாயகம், துணைத் தலைவர் ஏழுமலை உடனிருந்னர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X