கிரைம் செய்திகள்...

Added : நவ 18, 2021
Share
Advertisement
காப்பர் கம்பி திருட்டுவிழுப்புரம்: வளவனுார் அடுத்த பரசுரெட்டிப்பாளையத்தில் உள்ள மின் மாற்றி எண்.8ல் இருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ காப்பர் கம்பி திருடுபோனது. இதுகுறித்து ராம்பாக்கம் உதவி மின் பொறியாளர் தமிழ்வேல்,40; அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.தம்பி மாயம்: அண்ணன் புகார்அவலுார்பேட்டை: கலத்தம்பட்டு

காப்பர் கம்பி திருட்டு

விழுப்புரம்: வளவனுார் அடுத்த பரசுரெட்டிப்பாளையத்தில் உள்ள மின் மாற்றி எண்.8ல் இருந்த 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ காப்பர் கம்பி திருடுபோனது. இதுகுறித்து ராம்பாக்கம் உதவி மின் பொறியாளர் தமிழ்வேல்,40; அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.தம்பி மாயம்: அண்ணன் புகார்அவலுார்பேட்டை: கலத்தம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேலு மகன் கணேசன், 50; மனநலம் பாதிக்கப்பட்ட இவர்,

கடந்த 6ம் தேதி வீட்டிலிருந்து சென்றவர், வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது அண்ணன் ஆரிமுத்து அளித்த புகாரின் பேரில் அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.வாகனம் மோதி முதியவர் பலிஉளுந்துார்பேட்டை: புகைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கேசவன், 70; இவர்,

நேற்று காலை 6:30 மணியளவில் வீட்டிலிருந்து சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சம்பவ இடத்திலேயே கேசவன் இறந்தார். எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

வாகனம் மோதி மூதாட்டி பலி

விழுப்புரம்: பி.நத்தமேட்டை சேர்ந்தவர் முத்து மனைவி சின்னபொண்ணு, 59; இவர் நேற்று முன்தினம் பிடாகம் பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது, திருச்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்

.மகள் மாயம்: தந்தை புகார்ரி

ஷிவந்தியம்: கொம்பசமுத்திரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சூர்யா, 22; இவர், கடந்த 6 மாதங்களாக கோயம்புத்துாரில் தங்கி அங்குள்ள நுால் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். உடல்நிலை சரியில்லாததால் கடந்த 10 நாட்களுக்கு முன் ஊருக்கு வந்தவர் கடந்த 16ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. சக்திவேல் அளித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஏரியில் விழுந்து டிரைவர் பலிவிக்கிரவாண்டி: பெரியதச்சூர் அடுத்த ஆலகிராமத்தைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 54; டிராக்டர் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதை கழிக்க ஏரிக்கு சென்ற போது தவறி நீரில் விழுந்து மூழ்கி இறந்தார். பெரியதச்சூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

செக்யூரிட்டி சாவு: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: புதுச்சேரி மாநிலம், திருபுவனையைச் சேர்ந்தவர் லுார்துசாமி, 59; இவர், வளவனுாரில் உள்ள கிராம சுகாதார பயிற்சி மையத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2017ம் ஆண்டு, புதுச்சேரி ஜிப்மரில் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்நிலையில் நேற்று, பணிக்கு வந்த லுார்துசாமி பயிற்சி மையத்தில் இறந்தார்.

வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.மகள் மாயம்: தந்தை புகார்திருக்கோவிலுார்: பெருங்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை மகள் மகாலட்சுமி, 25; இவரை கடந்த 15ம் தேதி இரவு முதல் காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X