சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மர்ம கும்பல் அட்டகாசம் காஞ்சியில் 4 பேருக்கு வெட்டு

Added : நவ 18, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் கத்திகளுடன் திரிந்த மர்ம கும்பல், நான்கு பேரை வெட்டி, சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது.காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கத்தைச் சேர்ந்த ராஜமன்னார், வெங்கடேசன் ஆகியோருக்கும், மர்ம கும்பலுக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. இதில் ராஜமன்னார், வெங்கடேசன் ஆகியோருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது.அங்கிருந்து

காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் கத்திகளுடன் திரிந்த மர்ம கும்பல், நான்கு பேரை வெட்டி, சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து பொருட்களை உடைத்து நாசப்படுத்தியது.

காஞ்சிபுரம் அடுத்த சிறுவாக்கத்தைச் சேர்ந்த ராஜமன்னார், வெங்கடேசன் ஆகியோருக்கும், மர்ம கும்பலுக்கும் நேற்று இரவு தகராறு ஏற்பட்டது. இதில் ராஜமன்னார், வெங்கடேசன் ஆகியோருக்கு வெட்டு காயம் ஏற்பட்டது.அங்கிருந்து தப்பிய கும்பல், புதிய ரயில் நிலையம் அருகே உள்ள இந்திரா நகர் பகுதிக்கு சென்றது.அப்பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன், 25, அவர் தம்பி கமலேஷ், 19, ஆகிய இருவரிடம் தகராறு செய்து, அவர்களையும் கத்தியில் வெட்டி தப்பிச்சென்றது.காயம்பட்ட நான்கு பேரும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து, சாலை தெருவில் உள்ள தனியார் சூப்பர் மார்க்கெட்டில், அதே மர்ம கும்பல், கத்தியை காட்டி மிரட்டி அங்குள்ள பொருட்களை உடைத்து நாசம் செய்தது. இந்த சம்பவங்களில் ஈடுபட்டோர் யார் என, போலீசார் தேடி வருகின்றனர்.உடனடியாக, காஞ்சிபுரம் நகரில் வேறு எங்கும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மர்ம கும்பலை பிடிக்க, தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X