பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் 1,107 பயனாளிகளுக்கு ரூ.139 கோடி கடனுதவி

Added : நவ 18, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சியில் இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கியாளர்கள் சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் நடந்தது. கடலுார் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி 1,107 பயனாளிகளுக்கு 139 கோடி
 வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் 1,107 பயனாளிகளுக்கு ரூ.139 கோடி கடனுதவி

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த வங்கி வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாமில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கள்ளக்குறிச்சியில் இந்தியன் வங்கி மற்றும் அனைத்து வங்கியாளர்கள் சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் நடந்தது. கடலுார் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.

முகாமிற்கு கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கி 1,107 பயனாளிகளுக்கு 139 கோடி ரூபாய் கடனுதவி வழங்கி பேசுகையில், 'விவசாயிகள் மற்றும் அரசு துறைகளிலிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கடன் விண்ணப்பங்கள் மீது வங்கியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து கடனுதவி வழங்க வேண்டும்' என்றார்..
முகாமில், வங்கிகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 23 வாடிக்கையாளர் சேவை கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.மாவட்ட திட்ட இயக்குனர் மணி, இந்தியன் வங்கி மணி சுப்ரமணியம், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி அலுவலர் பாமா புவனேஸ்வரி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி துணை பொது மேலாளர் துவாரகநாத், ஸ்டேட் பாங்க் உதவி பொது

மேலாளர் சீதாராமன்.கனரா வங்கி உதவி பொது மேலாளர் மாதவி, கரூர் வைஸ்யா வங்கி உதவி பொது மேலாளர் முத்துக்குமார், ஆக்சிஸ் வங்கி துணைத் தலைவர் சீனிவாசன், டிஜிபி வங்கி பொது மேலாளர் ஆல்வின் ரத்தினராஜன்.ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பொது மேலாளர் குமார், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி முதன்மை மேலாளர் பிரதீப்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X