பொது செய்தி

தமிழ்நாடு

சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த அறிவுரை

Added : நவ 18, 2021
Share
Advertisement
விழுப்புரம் : சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் செய்திக்குறிப்பு:தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலம் விதைச் சான்றளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணைகளில் வயல்தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.சான்று பெற்ற விதைகள் அதிக

விழுப்புரம் : சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக மகசூல் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்ட அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் செய்திக்குறிப்பு:

தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை மூலம் விதைச் சான்றளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணைகளில் வயல்தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.சான்று பெற்ற விதைகள் அதிக புறத்துாய்மை, அதிக இனத்துாய்மை, அதிக முளைப்புத் திறன், குறைவான ஈரப்பதம் இல்லாமை போன்ற குணநலன்களைக் கொண்டிருக்கும். எனவே சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தும் போது அதிக விளைச்சல் கிடைக்கும்.

தற்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட ஏ.டி.ட்டி 39, ஏ.டி.ட்டி(ஆர்)45, டி.பி.எஸ்.5, கோ 51, ஏ.டி.ட்டி 37, ஏ.டி.ட்டி 43, டி.கே.எம். 9 போன்ற நெல் ரகங்கள் அரசு மற்றும் தனியார் உற்பத்தியாளர்களால் விநியோகிக்கப்படுகிறது.விவசாயிகள் சான்று பெற்ற விதைகளைப் பயன்படுத்தி அதிக மகசூல் பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X