திண்டிவனத்தில் மீன் மார்க்கெட்டிற்கு தனி இடம்... தேவை ; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை| Dinamalar

தமிழ்நாடு

திண்டிவனத்தில் மீன் மார்க்கெட்டிற்கு தனி இடம்... தேவை ; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Added : நவ 18, 2021
Share
திண்டிவனம் : திண்டிவனத்தில் குறுகிய இடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நகராட்சி மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திண்டிவனம் மேம்பாலத்தையொட்டியுள்ள ஓ.பி.ஆர். பார்க் அருகே நகராட்சி மீன் மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு, நெருக்கடியான இடத்தில் உள்ளது.பொதுமக்கள்
 திண்டிவனத்தில் மீன் மார்க்கெட்டிற்கு தனி இடம்... தேவை ;  மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திண்டிவனம் : திண்டிவனத்தில் குறுகிய இடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நகராட்சி மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டிவனம் மேம்பாலத்தையொட்டியுள்ள ஓ.பி.ஆர். பார்க் அருகே நகராட்சி மீன் மார்க்கெட் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாத அளவிற்கு, நெருக்கடியான இடத்தில் உள்ளது.பொதுமக்கள் மற்றும் மீன் வியாபாரிகளுக்கு போதுமான அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்டு வரும் மீன் மார்க்கெட்டால், பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

மேலும், மீன் மார்க்கெட்டையொட்டி, மலர் அங்காடியும் செயல்படுகி்றது. இதனால், மீன் மார்க்கெட் மற்றும் மலர் அங்காடிக்கு வரும் பொது மக்கள், வியாபாரிகள் தங்களின் இரு சக்க வாகனங்களை நடைபாதையில் நிறுத்துவதால், பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.அதுமட்டுமின்றி, மீன் மார்க்கெட் பகுதியில் இடப்பற்றாக்குறையால், ரோஷணை, அங்காளம்மன்கோவில், ஆஸ்பிட்டல் ரோடு, மார்க்கெட் கமிட்டி, தீர்த்தக்குளம் என பல்வேறு இடங்களில் நடைபாதை கடைகளை அமைத்து, சுகாதாரமற்ற முறையில் மீன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த பிரச்னையைத் தீர்க்க வேண்டுமென, திண்டிவனம் நகர மக்கள் சார்பில் பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும், இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது.நகரத்தின் மையப் பகுதியில் தனியாக அனைத்து வசதிகளுடன் கூடிய இடத்தைத் தேர்வு செய்து, அந்த இடத்தில் தனியாக மீன் மார்க்கெட் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் காய்கறி மார்க்கெட் பகுதியில் குறுகிய இடத்தில் இருந்த மீன் மார்க்கெட், புதிய பஸ் நிலையம் அருகே அனைத்து வசதிகளுடன் கூடிய இடத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.

அதே போன்று, திண்டிவனத்திலும் நகரின் மையப்பகுதியில் நகராட்சி சார்பில் மீன் மார்க்கெட் அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X