பயிர்கள் மூழ்கின: விவசாயிகள் கவலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பயிர்கள் மூழ்கின: விவசாயிகள் கவலை

Added : நவ 18, 2021
Share
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம், கஸ்பா காரணையில் ஏரி நீர் பிடிப்பு அதிகரிப்பு காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.விக்கிரவாண்டி ஒன்றியம், கஸ்பா காரணை ஏரி மூலம் கஸ்பா காரணை, பம்பாதிரிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 80 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரியில் நீர் நிரம்பி அருகே உள்ள விளை

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியம், கஸ்பா காரணையில் ஏரி நீர் பிடிப்பு அதிகரிப்பு காரணமாக பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

விக்கிரவாண்டி ஒன்றியம், கஸ்பா காரணை ஏரி மூலம் கஸ்பா காரணை, பம்பாதிரிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 80 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக ஏரியில் நீர் நிரம்பி அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்தது. இதனால் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல், உளுந்து, கோழிக்கொண்டை பூச்செடி, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின.அதிகாரிகள் இதுவரை வந்து பார்வையிடாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X